தென்மேற்கு பருவமழை இரண்டு நாள் தாமதமாக கேரளாவில் இன்று தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும். இதேபோல், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலம் வடகிழக்குப் பருவ மழை காலமாகும். தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கி கர்நாட்கா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு நல்ல மழையை தரும்.
இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் என கணிக்கப்பட்டிருந்தது. எனினும் அன்று பருவமழை தொடங்கவில்லை. இரண்டு நாட்கள் தாமதமாக இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கேரளாவின் தெற்கு பகுதியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளில் இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் மழை பெய்யலாம் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும் படிக்க.. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பீர் இலவசம்: எந்த நாட்டில் தெரியுமா?
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு அரேபிய கடல் பகுதி, லட்சத்தீவு பகுதி, தெற்கு கேரளா, தென் தமிழகம், கொமோரின் - மாலத்தீவின் மீதமுள்ள பகுதிகளில் இன்று தென்மேற்கு பருவம் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் பருவக் காற்று பிற பகுதிகளுக்கு நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தென்மேற்கு பருவமழையால் வட மாநிலங்கள் மழை பொழிவை பெறுகின்றன. அதேவேளையில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளும் அதிக மழையை பெறுகின்றன.
இதேபோல், தென்மெற்கு பருவமழையால் கர்நாடகாவில் அதிகளவு மழை பெய்யும் என்பதால் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காவிரியில் தண்ணீர் அதிகளவு அதிகரிக்கும் . இதனால் தமிழகத்துக்கு காவிரி ஆற்றின் நீர் திறக்கப்பட்டு டெல்டா பகுதிகள் அதிக பாசன வசதியை பெறுகின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala, Rainfall, Southwest monsoon, Tamilnadu