• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஒரு நாடு ஒரே மொழி என்ற அமித்ஷாவின் கருத்து - தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு

ஒரு நாடு ஒரே மொழி என்ற அமித்ஷாவின் கருத்து - தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷா

உள்துறை அமைச்சர் அமித்ஷா

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஒரே நாடு ஒரே மொழி என்ற அமித்ஷாவின் கருத்திற்கு தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    நாட்டில் உள்ள 22 மண்டல மொழிகளில் ஒன்றுதான் இந்தி என்றும், அது தேசிய மொழி என பொய் பிரசாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, கன்னட மொழி தினத்தை எப்போது கொண்டாடவுள்ளது என கர்நாடகாவின் மற்றொரு முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளை அழித்து, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை திணிக்கப் பார்ப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளரான கொடியேறி பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

    அரசு வெவ்வோறு மொழிகளை பயன்படுத்த அரசியல் சட்டப்பிரிவு 29-ல் உரிமை வழங்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள இஸ்லாமியக் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, இந்தி, இந்துத்துவாவை விட இந்தியா மிகப்பெரியது என தெரிவித்துள்ளார்.

    இந்தியை திணிக்க நினைப்பது நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானது என்றும், இதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் கேரள அமைச்சர் ஏ.கே.பாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்க மத்திய அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, அது நாட்டில் அமைதியின்மையை உருவாக்கும் என எச்சரித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: