ஹோம் /நியூஸ் /இந்தியா /

விளையாட்டு விபரீதமானது... பாராகிளைடிங் சாகச விபத்தில் தென்கொரிய பயணி மரணம்

விளையாட்டு விபரீதமானது... பாராகிளைடிங் சாகச விபத்தில் தென்கொரிய பயணி மரணம்

பாராகிளைடிங் சாகசத்தின் போது விபத்து

பாராகிளைடிங் சாகசத்தின் போது விபத்து

ஷின் 50 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, பாராகிளைடரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India

மகிழ்ச்சிகாக செய்யும் சாகச விளையாட்டுக்கள் சில முறை விபரீதங்களாக முடியும் துயர நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அப்படித்தான் குஜராத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் சாகச விளையாட்டின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தென் கொரியாவைச் சேர்ந்த ஷின் பயான்ங் மூன் என்ற நபர் குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். குஜராத்தின் வதோதரா பகுதியில் இவரது உறவினர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை பார்க்க வந்த ஷின், அங்குள்ள உற்றாருடன் விசத்பூரா என்ற பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளார். இந்த பகுதியில் பாராகிளைடிங் என்ற ஆகாசத்தில் பலூன் மூலம் பறக்கும் சாகச விளையாட்டு பிரபலமாக உள்ளது.

ஷின் இந்த பாராகிளைடிங் சாகச விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார் . ஷின் 50 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பராகிளைடரின் Canopy சரியாக திறக்காதாதல், வானத்தில் இருந்து கீழே விழுந்த ஷின் பயான்ங் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

' isDesktop="true" id="862249" youtubeid="Un-HpZ-jMCs" category="national">

இது சம்பவம் சுற்றுலா பயணிகள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிய அப்பகுதி காவல்துறையினர், விபத்து குறித்து ஷின்னின் உறவினர்கள் மற்றும் கொரிய தூதரகத்திற்கு தகவல் அனுப்பினர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

First published:

Tags: Accident, Gujarat, Viral Video