ஹோம் /நியூஸ் /இந்தியா /

தென்னிந்தியாவில் 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்'.. கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி - எப்போது, எங்கே?

தென்னிந்தியாவில் 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்'.. கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி - எப்போது, எங்கே?

தென்னிந்தியாவின் முதல் 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்'

தென்னிந்தியாவின் முதல் 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்'

விரைவில் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ள தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது பெங்களூரு வழியாக சென்னை - மைசூர் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வரும் நவம்பர் 11-ஆம் தேதி கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அவர் பெங்களூரு வழியாக இயங்க உள்ள தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸானது Train 18 என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் ஒரு செமி -ஹைஸ்பீட், இன்டர்சிட்டி, எலெக்ட்ரிக் மல்டிபிள்-யூனிட் ட்ரெயின் ஆகும். இதனிடையே நாட்டின் 5-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கர்நாடகாவில் இருந்து துவக்கி வைக்க உள்ள பிரதமர் மோடி, மேலும் பல திட்டங்களை துவக்கி வைப்பார் என கர்நாடக மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள அந்த மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும்.

விரைவில் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ள தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது பெங்களூரு வழியாக சென்னை - மைசூர் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.இதற்கு முன் புது டெல்லி - ஹிமாச்சலப் பிரதேசத்தின் அம்ப் அண்டவுரா இடையிலான நாட்டின் நான்காவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்திருந்தார்.

Read More : வந்தே பாரத்... தொடரும் விபத்து : ஒரே மாதத்திலேயே 3வது முறையாக மாடு மோதி விபத்துகுள்ளான ரயில்!

இவை தவிர மற்ற 3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடங்கள்பின்வருமாறு:

புதுடெல்லி - வாரணாசி, புதுடெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா (ஜம்மு&காஷ்மீர்) மற்றும் காந்திநகர் - மும்பை இடையே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முந்தைய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட தற்போது அறிமுகம் செய்யப்பட போகும் ரயில் மிகவும் இலகுவானது மற்றும் குறைந்த நேரத்தில் அதிக வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இது வெறும் 52 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.

கர்நாடகாவில் நாட்டின் 5-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி, சுமார் 2.5 கோடி விமானப் பயணிகளைக் கையாளும் வகையில் 5,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் (Kempegowda International Airport) இரண்டாவது டெர்மினலையும் மோடி தனது கர்நாடக பயணத்தின் போது திறந்து வைக்கிறார். அன்றைய தினமே (நவம்பர் 11) ஏர்போர்ட்டில் 108 அடி உயர கெம்பேகவுடாவின் வெண்கலச் சிலையை மோடி திறந்து வைக்கிறார்.

Read More : ”VVIP-க்களின் பாதுகாப்பு முக்கியம்” புல்லட் ப்ரூஃப் கார்களை அறிமுகப்படுத்தியுள்ள கோவா அரசு!

பெங்களூருவில் வரும் நவம்பர் 11-ஆம் தேதி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் காணொலி காட்சி மூலம் விளக்கமளித்தார். விழா ஏற்பாடுகள் குறித்த அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்த பொம்மை, விழாக்கள் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்க கூடாது. அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனிடையே விமான நிலையத்தில் சிறப்பு தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள மரக்கன்றுகள் இதில் இருக்கும். Nadaprabhu Kempegowda-வின் சிலையை பிரதமர் திறந்து வைப்பதை தொடர்ந்து பொது கூட்டம் நடைபெறும் என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: PM Modi