ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் உயிரிழப்பு! உளவுத்துறை தகவல்

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது.

ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் உயிரிழப்பு! உளவுத்துறை தகவல்
மசூத் அசார்
  • News18
  • Last Updated: March 3, 2019, 6:04 PM IST
  • Share this:
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளன.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் பாதுகாப்புபடை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது.

அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. மேலும், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி அறிவிக்க வேண்டும் என்று பி3 நாடுகள் என்று அழைக்கப்படும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவந்தனர்.


இதற்கிடையில், மசூத் ஆசார் கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. சிகிச்சையில் இருந்த மசூத் அசார் நேற்று இரவு (2-3-2019) உயிரிழந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்ததாக தகவல்கள் வந்துள்ளன. மசூத் ஆசார் உயிரிழந்தது குறித்து பாகிஸ்தான் ராணுவம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see:

First published: March 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading