4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும்: தே.மு.தி.கவிடம் கறார் காட்டும் அ.தி.மு.க!

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சியான அ.தி.மு.க, நேற்றைக்கு முந்தைய நாள் பா.ம.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை உறுதி செய்தது.

news18
Updated: February 21, 2019, 5:09 PM IST
4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும்: தே.மு.தி.கவிடம் கறார் காட்டும் அ.தி.மு.க!
அ.தி.மு.க தலைமை அலுவலகம்
news18
Updated: February 21, 2019, 5:09 PM IST
தே.மு.தி.கவுக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று அ.தி.மு.க திட்டவட்டமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இயங்கி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சியான அ.தி.மு.க, நேற்றைக்கு முந்தைய நாள் பா.ம.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்தது.

அ.தி.மு.கவுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்தார். அந்த சந்திப்பில், தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில், உடல்நலம் விசாரிக்க வந்ததாக பியூஸ் கோயல் தெரிவித்தார். இந்தநிலையில், இன்று காலையில் விஜயகாந்த், அவரது கட்சி நிர்வாகிகளுடன் காலையில் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசருடன் இன்று காலையில் விஜயகாந்தை நேரில் சந்தித்து, நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தே.மு.தி.கவை கூட்டணியில் எதிர்பார்க்கும் அ.தி.மு.கவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தே.மு.தி.கவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே அளிக்க முடியும் என்பதில் அ.தி.மு.க உறுதியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இதுகுறித்து இரண்டு நாளுக்குள், அதாவது 23-ம் தேதிக்குள் பதிலளிக்கவேண்டும் என்றும் அ.தி.மு.க தரப்பில் தே.மு.தி.கவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி தொகுதி பட்டியலை அறிவிக்க அ.தி.மு.க விரும்புவதாகவும் தெரிகிறது. பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியுள்ளநிலையில், 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க அ.தி.மு.க முடிவு எடுத்திருப்பது தே.மு.தி.க தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also see:

First published: February 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...