திருப்பதி திருமலை இடைய அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என தேவஸ்தான் அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஓய்.வி.சுப்பா ரெட்டி தலைமையில் இரண்டு ஆண்டுகள் பதவி காலத்துடன் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு இன்று தன்னுடைய பதவி காலத்தை நிறைவு செய்தது.இந்த நிலையில் நேற்று சுப்பா ரெட்டி தலைமையிலான அறங்காவலர் குழுவின் நிறைவு ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்டரங்கில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் நிருபர்களுடன் பேசிய அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, “ இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி என்னுடைய தலைமையில் அறங்காவலர் குழுவை அமைத்தபோது தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்கும் வகையில் அவர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்த அதற்கான முயற்சியை இன்னும் 90 நாட்களுக்குள் பூர்த்திசெய்ய குழு அமைக்கப்படும். குழுவின் பரிந்துரைகளுக்கு பின் ஏழுமலையான் கோவிலில் உள்ள பிரசாத தயாரிப்பு கூடம் மற்றும் தேவஸ்தானத்தின் பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பணி நிரந்தர உத்தரவு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
திருப்பதி மலையை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத பகுதியாக அறிவிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், “அதன் ஒரு பகுதியாக திருப்பதி மலையில் இயக்கப்படும் இலவச பேருந்துகளை அகற்றிவிட்டு மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பதி-திருமலை இடையே மின்சார பேருந்துகளை மட்டுமே இயக்க ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்திற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் இதற்காக 100 மின்சார பேருந்துகளை வாங்கவும் அவர் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்” என்று கூறினார்.
மேலும் படிக்க: நாளை முதல் ஊரடங்கு இல்லை- ஜூலையில் பள்ளிகள் திறப்பு..
விரைவில் திருமலை திருப்பதி இடையே மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.அதேபோல் திருப்பதி திருமலை இடையே மின்சாரத்தால் இயங்கும் டாக்ஸிகளை மட்டுமே இயக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், “கோவிலுக்கு ஒரு கோ மாதா என்ற எங்களுடைய புதிய திட்டத்தின் கீழ் ஏராளமான கோவில்களுக்கு தலா ஒரு பசு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் சரிவுக்கு ஏற்ப திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருப்பதி மலையில் தான் ஹனுமான் அவதரித்தார் என்பது தங்களுடைய நம்பிக்கை என்றும் அதற்கு தேவையான ஆதாரங்களையும் தாங்கள் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த விஷயத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்த கூடாது என்பதே தங்களின் முடிவு என கூறினார்.
அனுமதியின்றி திருப்பதி மலையில் வைக்கப்பட்டுள்ள கடைகள் இன்னும் நான்கு நாட்களுக்குள் அகற்றப்படும் என்று கூறியவர், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஹிந்து தர்ம பிரச்சாரம் என்ற அடிப்படையில் ஏழுமலையான் கோவில்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Tirumala Tirupati