Home /News /national /

இனி ஏ.டி.எம் கார்டு, செக் புக் வாங்கவும் பணம் செலுத்த வேண்டும்!

இனி ஏ.டி.எம் கார்டு, செக் புக் வாங்கவும் பணம் செலுத்த வேண்டும்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வங்கிகளில் இலவச சேவைகளுக்கும் இனி வாடிக்கையாளர்களிடம் கட்டணம் விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
இந்திய வங்கிகள் விரைவில் ஏ.டி.எம் கார்டுக்கும் செக் புக் வழங்குவதற்கும் கூட வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

வங்கிக் கணக்கில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச தொகையை வைப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லையேல் அதற்குக் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்பது தற்போதைய விதிமுறை. இதுவே வங்கிக் கணக்கு வைத்திருப்போருக்கு பெரும் தலைவலியாய் நீடிக்கும் சூழலில் தற்போது கூடுதல் செலவுகளை வாடிக்கையாளர்களுக்குத் தர காத்திருக்கின்றன இந்திய வங்கிகள்.

இந்திய வங்கிகளில் இலவச சேவைகளா ன ஏ.டி.எம் கார்டு, வங்கிக் காசோலை புத்தகம் ஆகியவை மீது ஜிஎஸ்டி விதிப்பதற்காக முதல் நோட்டீஸ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மத்திய வரித் துறையால் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டு தோல்வியைச் சந்தித்தது இந்திய வங்கிகள் சங்கம்.

இப்பிரச்னையில் பிரதமர் அலுவலகம் தலையிடவும் மறுத்துவிட்டது. இதனால் தான் தற்போது வங்கிகளில் கிடைத்து வரும் சில இலவச சேவைகளும் இனி கட்டண சேவைகளாக மாறும் சூழல் உள்ளது.

சில வங்கிகள் இலவச சேவைகள் மீது 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கத் தொடங்கிவிட்டன. இதுபோலவே வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகள் மீதுள்ள தேவையைப் பொறுத்து இதர வங்கிகளும் கட்டணம் வசூலிக்கத் தயாராகி வருகின்றன.

வாராக்கடன் சுமையால் தவித்து வரும் வங்கிகளுக்கு இந்த கட்டணங்கள் உதவி செய்யும் என்றாலும் வாடிக்கையாளர்களுக்கு இது கூடுதல் பளுவாகத் தான் அமைய உள்ளது.

மேலும் பார்க்க: உலகளவில் பாகுபலி 2 சாதனையை முறியடிக்கத் தவறிய 2.0
Published by:Rahini M
First published:

Tags: ATM Card, Bank

அடுத்த செய்தி