நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று... கொரோனாவிலும் மனதை வென்ற ரியல் ஹீரோவின் ட்வீட்

நடிகர் சோனு சூட்

நடிகர் சோனு சூட் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார். அதனுடன் தற்போது மற்றவர்களுக்கு உதவுவதற்கு அதிக நேரம் கிடைக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் உயிரிழப்பு ஆயிரத்திற்கு மேல் பதிவாகி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் நடிகர் சோனு சூட் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், வணக்கம் நண்பர்களே, எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

  எனவே என்னை நான் தனிமைப்படுத்தி கொண்டேன். கவலைப்பட ஒன்றிமில்லை, மாறாக முன்பை விட உங்கள் சிரமங்களை சரி செய்ய இப்போது எனக்கு அதிகம் நேரம் கிடைத்துள்ளது. நினைவில் கொள்ளுங்கள், எந்த பிரச்சனையும். நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன் என்றுள்ளார்.  நடிகர் சோனு சூட் கொரோனா மற்றும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பல புலம்பெயர்ந்த தொழிலாளரகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கு உதவி செய்து அனைவரது மனங்களிலும் நீங்கா இடம்பிடித்துள்ளார். இதனால் படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் நீங்கள் ரியல் ஹீரோ என ரசிகர்கள் பலர் அவரை அழைத்து வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: