’உங்கள் குழந்தைக்கு நான் பொறுப்பு’- சோனு சூட் மனிதநேயம்

சோனு சூட்

தெலங்கானாவை சேர்ந்த ரசிகர் ஒருவர் குறை பிரசவத்தில் பிறந்த தன்னுடைய குழந்தைக்கு உதவி செய்யுமாறு ட்விட்டரில் சோனுவை டேக் செய்து பதிவு செய்திருந்தார்

 • Share this:
  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. ஊரடங்கின் போது பாலிவுட் வில்லன் நடிகரான சோனு சூட் தனது மனிதநேயம் மிக்க செயல்களின் மூலம் மக்கள் மனதில் ஹீரோவாக உயர்ந்தார். ஊரடங்கின் போது மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்தார்.

  கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சமூகவலைதளங்கள் வாயிலாக மக்கள் அவரிடம் தொடர்ந்து உதவி கேட்டு வருகின்றனர். அவரும் இந்த இக்கட்டான சூழலில் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

  கொரோனா நோய்த்தொற்றால் தனிமைப்படுத்திக்கொண்ட சோனு சூட் சமூகசேவையை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தெலங்கானாவை சேர்ந்த ரசிகர் ஒருவர் குறை பிரசவத்தில் பிறந்த தன்னுடைய குழந்தைக்கு உதவி செய்யுமாறு ட்விட்டரில் சோனுவை டேக் செய்து பதிவு செய்திருந்தார். குழந்தையின் வீடியோவையும் அதில் பதிவிட்டிருந்தார்.

  அந்தப்பதிவில், “ சோனு சார்.. நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன். எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 7 மாதத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு வயிற்றில் தொற்று ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து எனக்கு எதாவது உதவி செய்யுங்கள். எனது குழந்தை கரீம் நகரில் உள்ள ஸ்டார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு உடனே பதிலளித்த சோனு, “ உங்கள் குழந்தைக்கு நாங்கள் பொறுப்பு” எனக் கூறியுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு பதிவை பதிவிட்டுள்ளார். தனக்கு கொரோனா டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என வந்திருப்பதாக கூறியுள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: