சஞ்சீவனி தடுப்பூசி பிரச்சாரத்தில் இணைந்தார் நடிகர் சோனு சூட்!

சஞ்சீவனி தடுப்பூசி பிரச்சாரத்தில் இணைந்தார் நடிகர் சோனு சூட்!

நடிகர் சோனு சூட்

ஏப்ரல் 7 ஆம் தேதி இந்த உலக சுகாதார தினத்தைத் தொடங்கும் நெட்வொர்க் 18 இன் புத்தம் புதிய பிரச்சாரமான ‘சஞ்சீவானி - எ ஷாட் ஆஃப் லைஃப்’-ஐ பாருங்கள்.

  • Share this:
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்ட அதே நாளில் கொரோனாவிற்கு எதிரான மிகப்பெரிய தடுப்பூசி போடும் சஞ்சீவனி தடுப்பூசி பிரச்சார திட்டத்தில் இணைந்துள்ளதாக பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த திட்டமானது உலக சுகாதார தினமான ஏப்ரல் 7ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது. இது மற்ற எல்லாவற்றையும் விட மிகவும் பொருத்தமான ஒரு பிரச்சாரம் மற்றும் அதிலிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

சஞ்சீவனியின் பின்னணி:

நெட்வொர்க் 18 குழுமத்தின் இந்த பிரச்சார இயக்கம்‘Sanjeevani – A Shot At Life’ என்றழைக்கப்படுகிறது. இது பெடரல் வங்கியின் கார்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) முயற்சியின் ஒரு அங்கமும் கூட. மேலும் இந்த பிரச்சார இயக்கத்தில் சுகாதார நிபுணராக அப்போலோ 24/7 இணைந்துள்ளது. இந்த பிரச்சாரம், நெட்வொர்க் 18 -ஆல் முன்னெடுக்கப்படும் மற்றும் நாட்டின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான சில மாவட்டங்களில் பெடரல் வங்கி மற்றும் அப்பல்லோ 24/7 ஆகியவற்றின் பங்கேற்புடன் தடுப்பூசி தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ளும்.

சஞ்சீவனி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் 2 வது கொரோனா அலையில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் 5 கிராமங்களை தத்தெடுத்து, தங்கள் கிராமங்களில் இலவச தடுப்பூசிகளை வழங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கிராமங்களில் Apollo 24/7 தடுப்பூசி முகாம்களை நடத்தும். இதில் அப்போலோவின் அனுபவமிக்க மருத்துவர்களும், செவிலியர்களும் ஈடுபடுத்தப்படுவர். இதன் மூலம் கொரோனா தடுப்பூசிகள் மீதான மக்களின் அச்சத்தை போக்குவதுடன் மக்களை தடுப்பூசி போட முன்வர வைக்க உந்துதலை ஏற்படுத்தும்.

இந்த பிரச்சாரத்தின் பிராண்ட் அம்பாஸிடரான நடிகர் சோனு சூட் சஞ்சீவி பிரச்சாரத்தின் மூலம் மக்களை தடுப்பூசி போட வலியுறுத்துவதில் முன்மாதிரியாக அவரே தடுப்பூசி போட்டுக் கொள்வார்.

குறிக்கோள் மற்றும் உத்தி

சஞ்சீவனி பிரச்சாரத்தின் முதல் குறிக்கோள் இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலையை முடிவுக்கு கொண்டுவருவதாகும். இந்தியர்கள் தடுப்பூசியை இப்போதே எடுத்துக்கொள்ள வேண்டிய நன்மைகள் மற்றும் காரணங்கள் பற்றிய தகவல்களை கொண்டு சேர்ப்பதுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரத் தயாராக இல்லாத சமூகத்தின் அடித்தட்டு மக்களையும் தடுப்பூசி வலையத்திற்குள் கொண்டு வருவது.

சிறப்பு சஞ்சீவனி பிரச்சார வாகனம் அம்ரிட்சரில் இருந்து கொடி அசைத்து துவக்கி வைக்கப்படும். இந்த வாகனம் பெடரல் வங்கியால் தேர்ந்தெடுக்கப்படும் 5 மாவட்டங்களில் 1500 கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். மேலும் இந்த கிராமங்களில் தடுப்பூசி போடுவதற்கான செலவை வேறு சில நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்படும்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அம்ரிட்சர், நாசிக், இந்தூர், குண்டூர் மற்றும் தக்‌ஷின கண்ணடா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த பிரச்சார வாகனம் செல்லும்.

முடிவு:

நகரங்களில் பணியாற்றும் தங்களின் ஊழியர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலையில் கடைக்கோடியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கும் தடுப்பூசிகளை போடுவதன் வாயிலாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.
Published by:Arun
First published: