இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி வழங்கும் சோனு சூட்: விண்ணப்பிப்பது எப்படி?

கோப்புப் படம்

நடிகர் சோனு சூட், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறார். சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் ஹிரோ என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

 • Share this:
  ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் இலவசமாக பயிற்சி வழங்கப்போவதாக நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார்.

  பாலிவுட், கோலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ள நடிகர் சோனு சூட், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்து ஊருக்கு செல்வதற்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்தது, ஆன்லைன் வகுப்பில் படிக்க செல்போன் இல்லாத மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்தது,  புலம்பெயர் தொழிலாளர்கள் சிலரை விமானம் மூலமாகவும் சொந்த ஊருக்கு அனுப்பி  வைத்தது, உணவுக்காக தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கி வருவது என தன்னால் இயன்ற உதவியை பொதுமக்களுக்கு சோனு சூட் செய்து வருகிறார்.

  அண்மையில், கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக 16 மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவவுள்ளதாக  அவர் கூறினார். சோனு சூட்டின் இந்த உதவிகளை பலரும் பாராட்டி வருகின்றனர். சினிமாவில் வில்லனாக நடித்து வந்தாலும் நிஜ வாழ்க்கையில் சோனு சூட் ஹிரோதான் என பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா காரணமாக கல்வி நிலையங்கள் மட்டுமல்லாது அரசு தேர்வுகளை எழுத பயிற்சி வழங்கும் பயிற்சி மையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், பலரும் தேர்வுக்கு தயாராவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு  தயாராகி வருபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கபோவதாக சோனு சூட் அறிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராக விருப்பமா.. நாங்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம்” என்றும் தனது சூட் அறக்கட்டை மற்று.ம் தியா நியூ டெல்லி ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ பொருளாதார ரீதியாக வாழ்க்கை உங்களை ஆசிர்வதித்தால், வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ளாதீர்கள், உங்களின் கொடுக்கும் தரத்தை உயர்த்திக்கொள்ளுங்கள்’ என்றும் சோனு சூட் பதிவிட்டுள்ளார்.

  www.soodcharityfoundation.org  என்ற இணையதளம் பக்கத்துக்கு சென்று இது தொடர்பாக விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Murugesh M
  First published: