முகப்பு /செய்தி /இந்தியா / ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க - பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்

ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க - பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்

சோனியா காந்தி

சோனியா காந்தி

சமூக நீதியை பின்பற்றி, மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்றும், இடஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

Also read... கொரோனா பாதித்து வீட்டில் தனிமை படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க செயலி

அனைத்து இந்திய இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7 புள்ளி 5 சதவீதமும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறியுள்ள அவர், இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதால், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை 11 ஆயிரம் மருத்துவப் படிப்பு இடங்களை ஓபிசி பிரிவினர் இழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இட ஒதுக்கீட்டை மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறியுள்ள சோனியா காந்தி, சமூக நீதியை பின்பற்றி, மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: OBC Reservation