ரேபரேலி தொகுதியில் இன்று சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்!

ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு எதிராக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வேட்பாளரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரேபரேலி தொகுதியில் இன்று சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்!
சோனியா காந்தி
  • News18
  • Last Updated: April 11, 2019, 11:17 AM IST
  • Share this:
உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில், 5-வது முறையாக போட்டியிடும் சோனியா காந்தி, இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில், உத்திர பிரதேச மாநிலத்தின் அமேதியில் ராகுல் காந்தி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து சோனியா காந்தி  வேட்புமனு தாக்கல் செய்ய இன்று ரேபரேலி சென்றுள்ளார். அதன்பின்னர் அங்கு நடைபெறவுள்ள பேரணியில் கலந்து கொள்கிறார்.

இந்த ரேபரேலி தொகுதிக்கு மட்டும்  5-ம் கட்டமாக மே 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தினேஷ் பிரதாப் சிங், சோனியா காந்திக்கு எதிராக பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.


ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு எதிராக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வேட்பாளரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... ஐபிஎல் : மும்பை அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி
Also see... புள்ளி பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறிய சிஎஸ்கே! 


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்