தனியார் ஆதாயம் பெற, ரயில்வேயை தனியார் மயமாக்குவதா? - சோனியா காந்தி 

அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்கள் மீது கவனம் செலுத்த வேண்டுமே தவிர, தனியார் நிறுவனங்களின் ஆதாயத்துக்காக செயல்படக்கூடாது என்று சோனியா காந்தி பேசினார்

news18
Updated: July 2, 2019, 10:28 PM IST
தனியார் ஆதாயம் பெற, ரயில்வேயை தனியார் மயமாக்குவதா? - சோனியா காந்தி 
சோனியா காந்தி
news18
Updated: July 2, 2019, 10:28 PM IST
தனியார் நிறுவனங்கள் ஆதாயம் பெறும் வகையில், ரயில்வே துறையை தனியார்மயமாக்க முயற்சிப்பதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி, தனது சொந்த தொகுதியான ரே பரேலியில் உள்ள பழமையான ரயில்வே தொழிற்சாலையை தனியாரிடம் கொடுக்கும் அளவுக்கு என்ன அவசியம் ஏற்பட்டது என கேள்வி எழுப்பினார். அவ்வாறு செய்வது ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்க வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசிய அவர் தனியார் நிறுவனங்கள் ஆதாயம் பெறும் வகையில், ரயில்வே துறையை தனியார்மயமாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்கள் மீது கவனம் செலுத்த வேண்டுமே தவிர, தனியார் நிறுவனங்களின் ஆதாயத்துக்காக செயல்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

Also watch

First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...