முகப்பு /செய்தி /இந்தியா / டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு இருக்கிறார்? - சோனியா காந்தி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு இருக்கிறார்? - சோனியா காந்தி

சோனியா காந்தி

சோனியா காந்தி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

”டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு இருக்கிறார்?” என்று செய்தியாளர்களிடம் கேள்வியெழுப்பியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

டெல்லி கலவரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சோனியா காந்தி, "கலவரம் வெடித்த ஞாயிறு முதல் உள்துறை அமைச்சர் எங்கே இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார்?கலவரம் உச்சத்தில் இருந்தபோது டெல்லி முதலமைச்சர் எங்கே இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார்? டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உளவுத்துறை கொடுத்த துப்புகள் என்னென்ன? அவற்றின் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? பிரச்னைக்குரிய பகுதிகளில் குவிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை எவ்வளவு? நிலைமை கைமீறிச்சென்ற நிலையில், ஏன் துணை ராணுவப்படை களமிறக்கப்படவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் சோனியா காந்தி.

முன்னதாக, ”அரசியல் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியபோதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினால் நடவடிக்கையின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை” என்று ஷஹீன்பாக் போராட்டக்காரர்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பான விசாரணையின் போது உள்துறை அமைச்சக வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இத்தகைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: CAA Protest, Delhi, Senior Congress leader Sonia Gandhi