Home /News /national /

நேஷனல் ஹெரால்டு வழக்கு - சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராகிறார்

நேஷனல் ஹெரால்டு வழக்கு - சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராகிறார்

சோனியா காந்தி

சோனியா காந்தி

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன விற்பனையில் நடந்த பண மோசடி குறித்து விசாரிப்பதற்காக கடந்த மாதம் 8 ஆம் தேதி ஆஜராகக்கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், அவரது மகன் ராகுல் காந்திக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டதால் விசாரணையில் ஆஜராவதில் விலக்க கோரப்பட்டது.  இதனையடுத்து சோனியாகாந்திக்கு வழக்கு விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியிடம் விசாரணை நிறைவுற்றுள்ளது.

    இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்த சோனியாகாந்தி  அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராக உள்ளார். சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அக்பர் சாலையில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சென்னையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்  உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Congress, National herald, Rahul gandhi, Sonia Gandhi

    அடுத்த செய்தி