முகப்பு /செய்தி /இந்தியா / சோனியா காந்தியின் தாயார் பாலோ மைனோ காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்

சோனியா காந்தியின் தாயார் பாலோ மைனோ காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்

சோனியா காந்தி

சோனியா காந்தி

முன்னதாக தாயாரை காண சோனியா காந்தி கடந்த 23ஆம் தேதி இத்தாலி சென்ற நிலையில், பாட்டியின் இறுதி சடங்கில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாலோ மைனோ காலமானார்.அவருக்கு வயது 90. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வயது முதிர்வு காரணமாக ஆகஸ்ட் 27ஆம் தேதி இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் பாலோ மைனோ காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதி சடங்குகள் செவ்வாய்கிழமை நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக தாயாரை காண சோனியா காந்தி கடந்த 23ஆம் தேதி இத்தாலி சென்ற நிலையில், பாட்டியின் இறுதி சடங்கில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த துக்க நேரத்தில் தனது எண்ணங்கள் சோனியா காந்தி குடும்பத்துடன் இருப்பதாக பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சோனியா காந்தியின் தாயார் திருமதி பாவ்லா மைனோவின் மறைவுக்கு இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். துக்கத்தின் இந்த நேரத்தில், எனது எண்ணங்கள் முழு குடும்பத்துடன் உள்ளன’ என குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Congress, Rahul gandhi, Sonia Gandhi