• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்!

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்!

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

  • Last Updated :
  • Share this:
    திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருந்தது. அவருக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் கூறியிருந்தார்கள்.

    ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அவருக்கு எழுதிய கடிதத்தில், ‘‘அரசியல் நாடகத்துக்கு எதிராக துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டா போல சிறையில் இருந்து நீங்கள் வெளியே வருவீர்கள்’’ என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்று கார்த்தி சிதம்பரம் ஆகியோர் திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீதும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ilavarasan M
    First published: