Home /News /national /

பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் - சோனியா காந்தி

பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் - சோனியா காந்தி

சோனியா காந்தி

சோனியா காந்தி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் ரே பரேலி தொகுதியில் நடந்த காங்கிரஸின் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

  • News18
  • Last Updated :
பொய்யான வாக்குறுதிகளை அளித்த பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ரேபரேலி தொகுதி வாக்காளர்களை சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரே பரேலி தொகுதியில் சோனியாகாந்தி 5-வது முறையாக போட்டியிடுகிறார். ரேபரேலி தொகுதியில் வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் சோனியா காந்தி நேற்று முதல்முறையாக பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், வாக்காளர்களின் கையில் வலுவான ஆயுதம் இருப்பதாக கூறினார். ஒவ்வொரு குடிமக்களுக்கும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி முதல், 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை மோடி அளித்ததாக கூறினார்.

ஆனால், வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறியது தேர்தல் நாடகம் என்பதை விவசாயிகள் புரிந்து கொண்டுள்ளதாகவும், இளைஞர்கள் இன்னும் வேலைவாய்ப்பை தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

ஜிஎஸ்டியும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் சிறு வர்த்தகர்களை அழித்துவிட்டதாக சோனியா காந்தி குற்றம் சாட்டினார். ரேபரேலி தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த திட்டங்களை அரசு செயல்படுத்தாமல் விட்டுவிட்டதாக அவர் கூறினார்.

எனவே, பொய்யான வாக்குறுதிகளை அளித்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று சோனியாகாந்தி கேட்டுக் கொண்டார். இந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Also see... நான் பாஜகவில் இணைவதாக கூறுவது அடிமுட்டாள்தனமானது - ஓபிஎஸ்

Also see... தென்ஆப்பிரிக்கா போல விரைவில் தமிழகமும் மாறும் - நீதிபதிகள் எச்சரிக்கை

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: Congress, Election 2019, Election Campaign, Priyanka gandhi, Raebareli, Sonia Gandhi, Uttarakhand Lok Sabha Elections 2019

அடுத்த செய்தி