பிரதமர் மோடியின் தோற்றத்தையும் தாடியையும் கிண்டல் செய்வதா?- காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி

காங்கிரஸ் கட்சி நாட்டையும், பிரதமர் மோடியையும் அவமானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. பிரதமர் மோடியின் தோற்றத்தையும், அவரின் தாடியையும் கிண்டல் செய்கிறது என்று பாஜக சாடியுள்ளது.

 • Share this:
  பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, காங்கிரஸ் கட்சியின் ரபேல் ஒப்பந்தம் பற்றிய குற்றச்சாட்டுக்கு கடும் விமர்சனங்கள் அடங்கிய பதிலடி கொடுத்துள்ளார்.

  ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்சில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ஊழல் குற்றச்சாட்டை மீண்டும் காங்கிரஸ் கட்சி எழுப்ப இங்கு பாஜக, காங்கிரஸ் தரப்பில் வாதங்கள், எதிர்வாதங்கள் எழுந்துள்ளன.

  “காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது, இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க ஏன் நினைக்கவில்லை. அப்போது ஏன் ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவில்லை.

  ஏனென்றால், சோனியா காந்தி குடும்பத்தாருக்கு விரும்பிய கமிஷன் கிடைக்கவில்லை.

  மீண்டும் காங்கிரஸ் கட்சி நாட்டையும், பிரதமர் மோடியையும் அவமானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. பிரதமர் மோடியின் தோற்றத்தையும், அவரின் தாடியையும் கிண்டல் செய்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, இதேபோன்ற யுத்தியைப் பயன்படுத்தி பிரதமர் மோடியை அவமானப்படுத்த காங்கிரஸ் முயன்றது. ஆனால், அதில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததைப் பார்த்தோம். நிராகரிக்கப்பட்ட டூல்கிட் மூலமும் காங்கிரஸ் கட்சியினர் பரிசோதிக்க விரும்பினால், இந்த நாட்டு மக்கள் நிச்சயம் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பதிலடி கொடுப்பார்கள்.

  ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரங்களில் உள்ள நடைமுறைகளையும், ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்த தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம், உச்ச நீதிமன்றம் நற்சான்றுஅளி்த்துள்ளன. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

  Also Read: கல் போல் மாறிய 5 மாதபெண் குழந்தை: புரியாத புதிர் நோயால் பெற்றோர் அதிர்ச்சி
   காங்கிரஸ் ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது என்றால், ஏன் ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதல் செய்யப்படவில்லை. காங்கிரஸ் கட்சி குழப்பத்தையும், போலித்தனத்தையும் பரப்பி, தன்னால் என்ன சிறந்ததைச் செய்ய முடியுமோ அதைச் செய்கிறது. இதனால், இந்தியாவுக்கு எதிரான சக்திகள்தான் பயன் அடைகின்றன” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.


  முன்னதாக காங்கிரஸ் கட்சி ரஃபேல் போர் விமானக் கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியது. நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு ஏன் பிரதமர் மோடி தயங்குகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் கேள்வி எழுப்பியுள்ளதற்குத்தான் பாஜக தற்போது இந்த பதிலை அளித்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: