காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை

சோனியா காந்தி

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

 • Share this:
  காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியாகாந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின்பு கட்சித்தலைவர்களை நேரில் சந்திக்கும் சோனியாகாந்தி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

  வேளாண்சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்தும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதிய அதிருப்தி தலைவர்களுடனும் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தவுள்ளார். கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சசிதரூர், கமல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: