பொருளாதார பாதிப்பை சரிசெய்யும் வகையில் மத்திய அரசிடம் திட்டம் இல்லை... சோனியா காந்தி குற்றச்சாட்டு!

அனைத்து அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்திலேயே இருப்பதாகவும், கூட்டாட்சி தத்துவம் மறக்கடிக்கப்பட்டுள்ளதாகவும் சோனியாகாந்தி தெரிவித்தார்.

  • Share this:
கொரோனா பெருந்தொற்றால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யும் வகையில், மத்திய அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று மற்றும் தற்போதைய அரசியல் சூழல் ஆகியவை குறித்து 22 கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தினார்.

இதில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, சரத் பவார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் காணொலிக்காட்சி மூலம் கலந்துகொண்டனர்.


இதில் தொடக்க உரையாற்றிய சோனியாகாந்தி, பொருளாதார மீட்பு குறித்த நிதியமைச்சரின் அறிவிப்புகள் மிகப்பெரும் நகைச்சுவையாக மாறியதாக தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், 13 கோடி ஏழைக் குடும்பங்கள் ஆகியோரின் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்று சோனியாகாந்தி குறிப்பிட்டார்.

ஏழைகளுக்கு பணம் வழங்க வேண்டும், அனைத்துக் குடும்பத்தினருக்கும் இலவச உணவு தானியங்களை வழங்க வேண்டும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பேருந்து மற்றும் ரயில் வசதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வுகாணும் வகையில், தற்போதைய அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்றும் வேதனை தெரிவித்தார்.

அனைத்து அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்திலேயே இருப்பதாகவும், கூட்டாட்சி தத்துவம் மறக்கடிக்கப்பட்டுள்ளதாகவும் சோனியாகாந்தி தெரிவித்தார்.

இதையடுத்து, உம்பன் புயல் தாக்குதலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று 22 கட்சிகள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றின. இதனைத் தொடர்ந்து, தலைவர்கள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading