சோனியா காந்தி தலைமையில் செப்.12 காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் கூட்டம்!

Web Desk | news18-tamil
Updated: September 7, 2019, 10:17 PM IST
சோனியா காந்தி தலைமையில் செப்.12 காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் கூட்டம்!
கோப்பு படம்
Web Desk | news18-tamil
Updated: September 7, 2019, 10:17 PM IST
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களுக்கான கூட்டம் வரும் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சி தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்  அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தொடங்கி அக்டோபர் 31-ம் தேதி சர்தார் வல்பாய் படேல் பிறந்தநாள் பாஜக எம்.பிகள் பாதயாத்திரை மேற்கொள்ள பிரதமர் மோடி ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார்.

பாஜக எம்.பிகள் அவர்களது தொகுதியில் மேற்கொள்ளும் பாதயாத்திரையின் போது காந்தியின் புகழ்பற்றியும் அவரது கிராமப்புற பொருளாதார நிலைகுறித்தும் எடுத்துரைக்க உள்ளனர். அதைப் போல காங்கிரஸ் கட்சி சார்பிலும் காந்தி குறித்து பிரச்சாரம் செய்வதற்கு ஏற்கெனவே மாநில நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே, அதுகுறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

 
First published: September 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...