ஹோம் /நியூஸ் /இந்தியா /

ராகுல் காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்க கர்நாடகாவுக்கு வந்த சோனியா காந்தி

ராகுல் காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்க கர்நாடகாவுக்கு வந்த சோனியா காந்தி

ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி

ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ராகுல் காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்க கர்நாடகா மாநிலம் மைசூருக்கு வருகை தந்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mysore, India

  ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி “பாரத் ஜோடோ யாத்ரா” என அழைக்கப்படும் இந்திய ஒற்றுமை பயணத்தை செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. முதல் நாள் அன்று கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து பயணத்தை தொடங்கி வைத்தார்.

  தமிழ்நாட்டில் நடைப்பயணத்தை முடித்து, பின்னர் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, தற்போது கர்நாடகாவிற்கு வந்துள்ளார். அம்மாநிலம் மைசூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்து கொண்டே ராகுல்காந்தி உரையாற்றினார்.இந்த பாரத் ஜோடோ யாத்திரை 26 நாள்களை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியும் ராகுல் காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்கவுள்ளார். இதற்காக அவர் கர்நாடகா மாநிலம் மைசூருவுக்கு இன்று வருகை தந்துள்ளார்.

  ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்தில், வரும் 6ஆம் தேதி அன்று சோனியா காந்தி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில், ராகுல் காந்தியுடன் சேர்ந்து சோனியா காந்தி நடைப்பயணம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி, சோனியா காந்தியுடன், பிரியங்கா காந்தியும் நடைப்பயணத்தில் இணைவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  இதையும் படிங்க: உபி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

  இதற்காக பிரியங்கா வரும் 8ஆம் தேதி கர்நாடகா வருகிறார் எனக் கூறப்படுகிறது. உடல் நலக்குறைவு காரணமாக வெளிநாட்டு மருத்துவ சிகிச்சை பெற்ற சோனியா காந்தி நீண்ட நாள்களாக பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பின் கட்சி தொண்டர்களை சந்திக்கும் விதமாக இந்த யாத்திரையில் சோனியா காந்தி பங்கேற்கவுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Mysore, Rahul gandhi, Sonia Gandhi