பாஜக அமைச்சருக்கு மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்த சோனியா காந்தி!

சோனியா காந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலியில் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளுக்கு நன்றி தெரிவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் நிதின் கட்கரிக்கு நன்றி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

news18
Updated: February 7, 2019, 7:24 PM IST
பாஜக அமைச்சருக்கு மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்த சோனியா காந்தி!
நிதின் கட்கரி - சோனியா காந்தி
news18
Updated: February 7, 2019, 7:24 PM IST
நாடாளுமன்ற மக்களவையில் நிதின் கட்கரிக்கு சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் அமர்வு நடந்து வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின் போது சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது துறையில் முன்னெடுக்கப்பட்ட பணிகள் குறித்து விளக்கமான பதில் அளித்தார்.

“அனைத்து தொகுதிகளிலும் எனது அமைச்சகம் சிறப்பான பணிகளைச் செய்துள்ளது. கட்சி எல்லையைத் தாண்டி அனைத்து எம்.பி.க்களும் பாராட்டியுள்ளனர்” என்று நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

அப்போது அவையில் இருந்து எழுந்த மத்தியப்பிரதேச மாநில எம்.பி. கணேஷ் சிங், நிதின் கட்கரி அமைச்சகம் மேற்கொண்ட சிறப்பான பணிக்கு அவையில் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, அவையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் மேஜையை தட்டி நிதின் கட்கரிக்கு பாராட்டு தெரிவித்தார். அவரை தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர்களும் பாராட்டை தெரிவிக்கும் வகையில் மேஜையை தட்டினர்.

ஏற்கனவே, சோனியா காந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலியில் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளுக்கு நன்றி தெரிவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் நிதின் கட்கரிக்கு நன்றி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also See...
Loading...
First published: February 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...