முகப்பு /செய்தி /இந்தியா / திறந்த வெளி, கொசுக்கடி, பகல் இரவு பாராமல் தொடரும் தர்ணா போராட்டம்.. விடாபிடியாய் நிற்கும் 24 எம்பிக்கள்

திறந்த வெளி, கொசுக்கடி, பகல் இரவு பாராமல் தொடரும் தர்ணா போராட்டம்.. விடாபிடியாய் நிற்கும் 24 எம்பிக்கள்

தர்ணா போராட்டத்தில் சஸ்பெண்ட் ஆன எம்பிக்கள்

தர்ணா போராட்டத்தில் சஸ்பெண்ட் ஆன எம்பிக்கள்

சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக பகல் இரவு பாராமல் திறந்த வெளியில் 24 எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட 24 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே 50 மணி நேர தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத் தொடங்கிய முதல் நாளில் இருந்தே விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடைபெற வேண்டும் என மாநிலங்களவையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை தலைவர் நாற்காலி முன்னர் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட சுமார் 20 எம்.பி-க்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் உத்தரவிட்டார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் ஏழு பேர், திமுக எம்பிக்கள் ஆறு பேர் ஆகியோர் அடக்கம். அதேபோல், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, சிபிஐ, சிபிஎம், ஆம்ஆத்மி ஆகிய கட்சி உறுப்பினர்களும் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர்.

அதேபோல், மக்களவையிலும் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் ஜோதிமணி, மாணிக் தாகூர் உள்ளிட்ட 4 எம்.பிக்களை மழைகால கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 24 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தங்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்து 50 மணி நேரம் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தர்ணாவில் ஈடுபடும் எம்பிக்களில் பெரும்பாலானோர் தலையனை, படுக்கை விரிப்பு போன்றவற்றை வைத்துக்கொள்ளவில்லை. திறந்த வெளியில் போராடும் எம்பிகள் அங்குள்ள புள் வெளி மீது பிளாஸ்டிக் கார்பெட் ஒன்றை விரித்து போட்டு அதன் மேலே அமர்ந்தும் படுத்தும் பொழுதை கழிக்கின்றனர். அதேபோல், தர்ணாவில் ஈடுபடும் எம்பிக்கள் தங்களுக்கான உணவுகளை ஒவ்வொருவராக மாறி மாறி வாங்கி கொடுத்து பகிர்ந்து கொள்கின்றனர். காலை உணவை திமுக மாநிலங்களை உறுப்பினர் திருச்சி சிவா ஏற்பாடு செய்து வழங்கி வருகிறார்.

அதேபோல, தெலாங்கானா ராஷ்டிரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் மத்திய உணவு, இரவு உணவு ஆகியவற்றுக்கு மாறி மாறி ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர். இரவு நேரங்களில் குளிரும் கொசுவும் வாட்டினாலும், அவர்களுக்குள் உரையாடிக்கொண்டும், சில நேரங்களில் பாட்டுக்களை பாடிக்கொண்டு போராட்டத்தை கூலாக தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரு லிட்டர் கோமியம் ரூ.4க்கு கொள்முதல்.. புதிய திட்டத்தை தொடங்கிய சத்தீஸ்கர் அரசு

இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் மன்னிப்பு கேட்டு இனி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்தால், சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்ப பெறப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். ஆனால், மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என எதிர்க்கட்சி எம்பிக்கள் திட்டவட்டமாக உள்ளனர்.

First published:

Tags: Congress, Protest, Rajya Sabha