Home /News /national /

சோனாலி போகத் மரணம்: போதை மருந்து கொடுத்து கற்பழித்துக் கொலை என சகோதரர் போலீசில் பரபரப்பு புகார்...

சோனாலி போகத் மரணம்: போதை மருந்து கொடுத்து கற்பழித்துக் கொலை என சகோதரர் போலீசில் பரபரப்பு புகார்...

சோனாலி போகத் , சகோதரர்

சோனாலி போகத் , சகோதரர்

சுதிர் தனக்கு போதைப்பொருள் கலந்த உணவை கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்குவேன் என மிரட்டியதாக சோனாலி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Goa |
பாஜக தலைவரும், நடிகையுமான சோனாலி போகத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பம், காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

சோனாலியின் மரணம் மாரடைப்பால் நடக்கவில்லை. அது ஒரு கொலை என்று குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். மேலும் சோனாலி, அவரது தனிப்பட்ட உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் ஆகியோரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சந்தேகித்து, அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.

டிக் டோக்கில் புகழ் பெற்ற ஹரியானாவைச் சேர்ந்த பாஜக தலைவர் போகத் (42) செவ்வாய்கிழமை காலை வடக்கு கோவாவில் உள்ள அஞ்சுனாவில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனையில் "மாரடைப்பால் இறந்தார்" என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் மாரடைப்பால் இறக்கவில்லை அவரது உணவில் போதைப்பொருள் கலக்கப்பட்டு , கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவரது சகோதரர் ரிங்கு தாகா புகார் அளித்துள்ளார். அவரது உடற்கூராய்வில் இது குறித்து ஆராய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதித்ததற்காக போலீஸ் ஸ்டேஷனின் மின் இணைப்பை துண்டித்த லைன்மேன்

புகாரில், சோனாலியின் சகோதரர் ரிங்கு தாகா, ஆகஸ்ட் 22 ஆம் தேதி போகாட்டின் மைத்துனர் அமன் புனியாவிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹிசாரில் உள்ள தனது வீட்டில் சங்வானும் அவரது நண்பரும் திருடியுள்ளனர் என்றும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஹிசார் திரும்பியதும் காவல்துறையை அணுகுவதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது உதவியாளர் சுதிர் தனக்கு போதைப்பொருள் கலந்த உணவை கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்குவேன் என மிரட்டியதாக சோனாலி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சோனாலியின் சகோதரர் ரிங்கு, தனது சகோதரிக்கு எதிராக அரசியல் சதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.



சோனாலியின் தொலைபேசிகள், சொத்துப் பதிவுகள், ஏடிஎம் கார்டுகள் மற்றும் வீட்டுச் சாவிகளை வைத்து அவரது அரசியல் மற்றும் திரைப்பட வாழ்வை அழித்துவிடுவேன் என்று சுதிர் மிரட்டியதாகவும் கூறினார்.

படப்பிடிப்பிற்காக கோவா செல்வதாக சோனாலி கூறியிருந்தார். ஆனால், நாங்கள் வந்து பார்க்கும்போது இங்கு எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. எனவே இதுவும் சுதிரின் கொலைத்திட்டத்தில் ஒன்றாக இருக்கலாம் என்று ரிங்கு தெரிவித்தார்.

இதையும் படிங்க: 30 ஆயிரம் ரூபாய்க்காக இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதி... பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம்

சோனாலியின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் சுதிர் தெரிவித்திருந்தார். அதன்பிறகு சுதீரை அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்டபோது சுதிர் போனை எடுக்கவில்லை. அவர் தனது தொலைபேசியையும் சோனாலியின் இரு தொலைபேசிகளையும் சுவிட்ச் ஆஃப் செய்திருந்தார். இதையும் தனது புகரில் ரிங்கு குறிப்பிட்டுள்ளார்.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், சோனாலி போகட்டின் மரணம் குறித்து கோவா காவல்துறை உரிய விசாரணை நடத்தி வருவதாகக் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை கோவா டிஜிபி தீவிரமாகக் கண்காணித்து வருகிறார் என்றும் தெரிவித்தார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: BJP, TikTok

அடுத்த செய்தி