Home » News » National » SONALI PHOGAT IN ADAMPUR ELECTION RESULTS 2019 SONALI PHOGAT OF BJP LOSES SAN

ஹரியானாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட ’டிக் டாக்’ நட்சத்திரம் தோல்வி!

ஹரியானாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட ’டிக் டாக்’ நட்சத்திரம் தோல்வி!
சோனாலி போகத்
  • News18
  • Last Updated: October 24, 2019, 6:24 PM IST
  • Share this:
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளது.

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக 40 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  யாரும் எதிர்பாராதவிதமாக துஸ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.


இதனால், ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. எனினும், ஆட்சியமைக்க சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகளின் ஆதரவு தேவை என்ற நிலை உள்ளது.

ஆனால், பாஜகவுக்கு சுயேட்சைகள் ஆதரவு போதுமானதாக உள்ளது. இதனால், அக்கட்சி சுயேட்சைகளை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருக்கிறார்.இதனிடையே அடம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட டிக் டாக் பிரபலம் சோனாலி போகத் தோல்வி அடைந்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிசோனிக்கிடம் 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைந்தார்.

First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading