Home /News /national /

பிரபல பிக்பாஸ் நடிகை மாரடைப்பால் மரணம்... வைரலாகும் கடைசி வீடியோ

பிரபல பிக்பாஸ் நடிகை மாரடைப்பால் மரணம்... வைரலாகும் கடைசி வீடியோ

சோனாலி போகட்

சோனாலி போகட்

Sonali Phogat: சோனாலி போகட்டின் இறப்புக்கு ஹரியானா முதல்வர் எம்.எல். கத்தார் உட்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Haryana, India
    பாஜகவைச் சேர்ந்தவரும்  இந்தி பிக்பாஸ் சீசன் 14 நிகழ்ச்சி மூலம் அறியப்படுபவருமான நடிகை சோனாலி போகட் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    ஹரியானாவைச் சேர்ந்த சோனாலி போகட் தொலைக்காட்சி  தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமானவர். டிக்டாக் சமூக ஊடகங்களில் பல்வேறு வீடியோக்களை சோனாலி போகட் வெளியிட்டு தனக்கென ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தினார்.  19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரை டிக்டாக்கில் ஃபாலோ செய்தனர். அவர் இந்தி பிக்பாஸ் சீசன் 14 நிகழ்ச்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் புகழடைந்தார்.

    கடந்த 2008ம் ஆண்டில்  பாஜகவில் இணைந்த சோனாலி போகட் கடந்த 2019ம் ஆண்டு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில், கோவாவுக்கு நண்பர்களுடன் சென்ற அவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 41.

    திங்கள்கிழமை இரவு, வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள அஞ்சுனாவில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனைக்கு சோனாலி போகட் கொண்டு வரப்பட்டதாக  PTI  செய்தி நிறுவனம், தெரிவித்துள்ளது. மேலும், அவர் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக  துணை போலீஸ் சூப்பிரண்டு (மபுசா) ஜிவ்பா தல்வி தெரிவித்தார்.




    சோனாலி போகட்டின் இறப்புக்கு ஹரியானா முதல்வர் எம்.எல். கத்தார் உட்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  சோனாலி இறப்பதற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றியிருந்தார். அவரின் கடைசி வீடியோவான அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: BJP, TikTok

    அடுத்த செய்தி