’அப்பாவுக்கும் அத்வானிக்கும் பா.ஜ.க-வில் மதிப்பே இல்லை’ - குமுறும் சோனாக்‌ஷி சின்ஹா

ஜேபி நாராயணன், வாஜ்பாய், அத்வானி ஆகிய தலைவர்கள் என் அப்பாவின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர். ஆனால், இவர்கள் யாருக்குமே இன்றைய கட்சி சூழலில் மரியாதை இல்லை.

Web Desk | news18
Updated: March 30, 2019, 1:14 PM IST
’அப்பாவுக்கும் அத்வானிக்கும் பா.ஜ.க-வில் மதிப்பே இல்லை’ - குமுறும் சோனாக்‌ஷி சின்ஹா
சோனாக்‌ஷி சின்ஹா
Web Desk | news18
Updated: March 30, 2019, 1:14 PM IST
ஆளும் பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா அறிவித்துள்ளார்.

இரண்டு முறை எம்.பி., முன்னாள் பாலிவுட் ஹீரோ என வெற்றிக் கூட்டணிகளுடன் மட்டுமே தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்து வந்த சத்ருகன் சின்ஹா, தற்போது பா.ஜ.க-விலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து சத்ருகன் சின்ஹாவின் மகளும் நடிகையுமான சோனாக்‌ஷி சின்ஹா ஏஎன்ஐ செய்திகளிடம் பேசியுள்ளார்.

சோனாக்‌ஷி கூறுகையில், “பாஜக-விலிருந்து அப்பா நீண்ட காலத்துக்கு முன்பே விலகியிருக்க வேண்டும். அவருக்கு உரிய மரியாதை அக்கட்சியில் கிடைக்கவேயில்லை. தொடக்க காலத்திலிருந்தே கட்சியில் அப்பாவுக்கு நற்பெயர் இருந்தது.

ஜேபி நாராயணன், வாஜ்பாய், அத்வானி ஆகிய தலைவர்கள் என் அப்பாவின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர். ஆனால், இவர்கள் யாருக்குமே இன்றைய கட்சி சூழலில் மரியாதை இல்லை. உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் சரியில்லாமல் போனால், மாறுவதில் தப்பில்லை. அதைத்தான் தந்தையும் செய்துள்ளார்” என்றார்.

சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற ஏப்ரல் 6-ம் தேதி வெளியிடப்படும் என சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: புல்வாமா தாக்குதல் நடத்திய பிரதமர் மோடி... பிரேமலதா டங் சிலிப்
First published: March 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...