Home /News /national /

சொத்துக்காக தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் - சிசிடிவி மூலம் சிக்கி கைதானார்

சொத்துக்காக தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் - சிசிடிவி மூலம் சிக்கி கைதானார்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சொத்துக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தையை காரில் மோதி கொலை செய்ய முயன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சொத்துக்காக மகன் ஒருவர் தந்தையை காரை மோதி கொலை செய்ய முயன்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பிலேர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ரெட்டி. இவர் மூன்று நாட்களுக்கு முன்னர் பிலேர் தனியார் பைக் ஷோரூம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று படுகாயமடைந்த சந்திரசேகர் ரெட்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை விபத்து நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆராய்ந்தது. இதில் சந்திர சேகர் ரெட்டி மகனான ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் லட்சுமி பிரசாத் ரெட்டி, தனது தந்தையை கொலை செய்ய திட்டம்போட்டு விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    சந்திரசேகர் ரெட்டி இரண்டு திருமணங்கள் ஆன நிலையில் முதல் மனைவி தற்போது உயிருடன் இல்லை. முதல் மனைவி மகனான ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் லட்சுமி பிரசாத் ரெட்டிக்கும் அவருடைய தந்தை சந்திரசேகர் ரெட்டிகும் இடையே நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்சினை நிலவி வந்தது. இரண்டாவது மனைவியுடன் வசித்து வரும் தந்தை சந்திரசேகர் ரெட்டி அவருக்கே சொத்தை எழுதி வைக்கலாம் என்று சந்தேகம் லட்சுமி பிரசாத் ரெட்டிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தந்தையை கொலை செய்ய திட்டம் போட்ட அவர், 3 நாட்களுக்கு முன்னர் பிலேர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தையை காரில் மோதி கொலை செய்ய முயன்று தப்பி சென்றுள்ளார்.

    இதையும் படிங்க: பெண்களுக்கு கட்டாய நைட் ஷிப்ட் கூடாது.. உ.பி. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு

    இதையடுத்து லக்ஷ்மி பிரசாத் ரெட்டியை கைது செய்த காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்துக்காக தந்தையை மகனே காரில் மோதி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Asset, Father, Murder case

    அடுத்த செய்தி