covid-19 மரணத்தை எதிர்நோக்கும் அம்மாவுக்காக வீடியோ காலில் பாடிய மகன் - மருத்துவரின் உருக்கமான பதிவு

மாதிரிப்படம்

நானும் செவிலியர்களும் அங்கேயே நின்றிருந்தோம். நாங்கள் எங்கள் தலையை அசைத்தோம் எங்கள் கண்களில் ஈரம் இருந்தது.

  • Share this:
    கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மரணத்தின் வாயிலின் காத்திருக்கும் அம்மாவுக்காக மகன் பாடிய அந்த உருக்கமான நிகழ்வை மருத்துவர் ஒருவர் சமூகவலைதளத்தில் விவரித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதார பணியாளர்களும்தான் முன்னின்று போராடுகின்றனர்.

    ஸ்டெதாஸ்கோப் அணிந்த கடவுளாகத் தான் மருத்துவர்கள் பார்க்கப்படுகின்றனர். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வயதான பெண்மணியின் இறுதிநிமிடங்களில் மகன் பாடிய அந்த உணர்ச்சிகரமான சம்பவத்தை மருத்துவர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    மருத்துவர் தீப்ஷிகா கோஷ் தனது ட்விட்டர் பதிவில், “என்னுடைய ஷிப்ட் முடிவடையும் நேரம். உயிர்பிழைக்க வாய்ப்பில்லாத ஒரு நோயாளியின் உறவினருக்கு நான் வீடியோ கால் செய்தேன். எங்கள் மருத்துவமனையில் நோயாளிகள் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். இது வழக்கமான ஒன்றுதான். அந்த நோயாளியின் மகன் என்னிடம் சில நிமிடங்களை கேட்டார். இறக்கப்போகும் தனது அம்மாவுக்காக ஒரு பாடலை பாடினார்.

    அவர் 'தேரா முஜ்சே ஹை பெஹலா கா நாட்டா கோய்' எனும் பாடலை பாடினார். அவரை பார்த்த படி போனை கையில் பிடித்திருந்தேன். அவர் தன்னுடைய தாயை பார்த்து பாடிக்கொண்டிருந்தார். அந்த அறைக்குள் செவிலியர்கள் வந்தனர் அவர்களும் அமைதியாக நின்றுக்கொண்டார். பாதியில் அவர் உடைந்துவிட்டார். இருப்பினும் அந்தப்பாடலை இறுதிவரை பாடி முடித்தார். அந்த தாயின் உடல்நலன் குறித்து விசாரித்துவிட்டு எனக்கு நன்றிக்கூறி போனை துண்டித்துவிட்டார்.

    Today, towards the end of my shift, I video called the relatives of a patient who is not going to make it. We usually do that in my hospital if it’s something they want. This patient’s son asked for a few minutes of my time. He then sang a song for his dying mother.



    நானும் செவிலியர்களும் அங்கேயே நின்றிருந்தோம். நாங்கள் எங்கள் தலையை அசைத்தோம் எங்கள் கண்களில் ஈரம் இருந்தது. செவிலியர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேறி நோயாளிகளை கவனிக்க அல்லது வெண்டிலேட்டர், டயாலிஸிஸ் யூனிட்களில் இருந்து வந்த அலாரம் காரணமாக அங்கிருந்து சென்றனர். இந்தப்பாட்டு எங்களை மாற்றிவிட்டது. குறைந்தபட்சம் என்னை மாற்றிவிட்டது. இந்தப்பாடல் எப்பொழுதும் அவர்களுடையதாகவே இருக்கும்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: