என்னைக் கேட்காமல் பெற்றடுத்தது ஏன்? பெற்றோர் மீது வழக்கு தொடர இருக்கும் மகன்

பிள்ளைகள் பெற்றோருக்கு எவ்விதத்திலும் கடன்படவில்லை என்று வாதிடும் அவர், பெற்றோர் தங்கள் மகிழ்ச்சிக்காகவே பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதாகக் கூறிவருகிறார்.

என்னைக் கேட்காமல் பெற்றடுத்தது ஏன்? பெற்றோர் மீது வழக்கு தொடர இருக்கும் மகன்
ரஃபேல் சாமுவேல்
  • News18
  • Last Updated: February 7, 2019, 3:11 PM IST
  • Share this:
தனது அனுமதியின்றி தன்னை பெற்றெடுத்ததற்காக மும்பையைச் சேர்ந்த ரஃபேல் சாமுவேல் என்ற இளைஞர் தனது பெற்றோர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ரஃபேல் சாமுவேல் என்ற இளைஞர், தனிப்பட்ட பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை முறை குறித்து பாடமெடுத்து வருகிறார்.

பிள்ளைகள் பெற்றோருக்கு எவ்விதத்திலும் கடன்படவில்லை என்று வாதிடும் அவர், பெற்றோர்கள் தங்களது மகிழ்ச்சிக்காகவே பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதாகக் கூறிவருகிறார்.


அனுமதியின்றி பெற்றோர்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் போக்கு குறித்து, அவரவர்கள் பெற்றோரிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றும் அவர் தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இதற்கெல்லாம் உச்ச கட்டமாக தனது அனுமதியின்றி தன்னை பெற்றெடுத்ததற்காக தனது பெற்றோர் மீது வழக்கு தொடர இருப்பதாகக் கூறி ரஃபேல் சாமுவேல் அதிர வைத்துள்ளார்.

பிள்ளைகளின் வெளிப்படையான அனுமதியின்றி அவர்களைப் பெற்றெடுக்க உரிமை இல்லை என்றும் அவர் வாதிட்டுள்ளார். எனினும், ஒரு குழந்தை எப்படி பிறக்கும் முன் பெற்றோரிடம் அனுமதி கேட்கமுடியும்? என்பதுபற்றி அவர் எதுவும் கூறவில்லை.

Also See..

First published: February 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்