Home /News /national /

பெற்றோர் சொத்தில் பிள்ளைகள் உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெற்றோர் சொத்தில் பிள்ளைகள் உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பம்பாய் உயர் நீதிமன்றம்

பம்பாய் உயர் நீதிமன்றம்

, இரண்டு வீடுகளில் ஒன்று தந்தை பெயரிலும் மற்றொன்று தாய் பெயரிலும் உள்ளது. அவர்கள் உயிருடன் உள்ளவரை வீட்டில் ஆசிஃப் (மகன்) உரிமை கோர முடியாது.  பெற்றோர் இருக்கும்போதே ஃபிளாட்டில் தனக்கு உரிமை உள்ளது என அவர் கூறுவது நகைப்புக்கு உரியது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
    பெற்றோர் உயிருடன் வாழும்போது அவர்களின் சொத்தில் பிள்ளைகள் உரிமை கோர முடியாது  என்று பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    மகராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சோனியா ஃபாசில் கான் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது கணவர்  உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுகையாக உள்ளதால் அவரது சொத்துக்கு தன்னை சட்டப்பூர்வ பாதுகாவலராக நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதேவேளையில்,  சோனியாவின் மகன் ஆசிஃப் கான், இதனை எதிர்த்தும், சொத்தில் தனக்கு உரிமை கோரியும் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு, பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவுதம் பட்டேல், மாதவ் ஜம்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது ஆசிஃப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஆசிஃபின் பெற்றோருக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளதாகவும் அவர்கள் உயிருடன் இருந்தாலும் வீட்டில் ஆசிஃப்க்கு சட்ட உரிமை உள்ளது என்றும் வாதிட்டார்.

    இதனை கேட்ட நீதிபதிகள், இரண்டு வீடுகளில் ஒன்று தந்தை பெயரிலும் மற்றொன்று தாய் பெயரிலும் உள்ளது. அவர்கள் உயிருடன் உள்ளவரை வீட்டில் ஆசிஃப் (மகன்) உரிமை கோர முடியாது.  பெற்றோர் இருக்கும்போதே ஃபிளாட்டில் தனக்கு உரிமை உள்ளது என அவர் கூறுவது நகைப்புக்கு உரியது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

    இதையும் படிங்க: கறி குழம்பு சமைத்து தராத மனைவி.. 100க்கு போன் போட்டு புகார் சொன்ன கணவன் - அடுத்து நடந்தது சம்பவம்..


    மேலும் தனது மற்றும் கணவர் பெயரில் உள்ள கூட்டு கணக்கை நிர்வகிக்க சோனியாவுக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், செலவழிக்கும் தொகைக்கு கணக்கு வைக்க வேண்டும் என்றும், தனது தனிப்பட்ட செலவுக்கு அந்த பணத்தை செலவழிக்க கூடாது என்றும் கூறியுள்ளது. மேலும், நீதிமன்ற அனுமதி இல்லாமல் வீட்டை விற்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    அடுத்த செய்தி