ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் டில்லி பாபு. இவரது ஒரு மகனான 21 வயது பரத் கூலி தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்ற 39 பெண்ணுக்கும் உறவு ஏற்பட்டுள்ளது.
ஜான்சிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பரத்துடன் ஜான்சிக்கு உறவு ஏற்பட்டது அவரது தந்தை டில்லி பாபுவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் மகனை டில்லி பாபு கண்டித்துள்ளார். ஜான்சியின் கணவர் விவாகரத்து வாங்கி பிரிந்து சென்ற நிலையில், பரத் மற்றும் ஜான்சி இருவரின் உறவு ஆழமாக தொடர்ந்துள்ளது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த தந்தை டில்லி பாபு இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து காவலர்கள் ஜோடி இருவரையும் அழைத்து கவுன்சிலிங் தந்துள்ளனர். இது மகன் பரத்தை ஆத்திரமூட்டியுள்ளது. தனது தந்தையை அடித்து பழிவாங்க போகிறேன் என காதலியிடம் தெரிவித்து விட்டு, வீட்டிற்கு வந்து இரும்பு ராடால் தந்தை டில்லி பாபுவின் மண்டையை அடித்து உடைத்துள்ளார்.
இந்த தாக்குதலின்போது காதலிக்கு வீடியோ கால் செய்து அதை லைவில் காட்டியுள்ளார் பரத். ரத்த வெள்ளத்தில் இருந்த டில்லி பாபுவை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Chittoor, Crime News, Extramarital affair, Illegal affair, Illegal relationship