Home /News /national /

மதுபோதையில் பணம் கேட்டு வயதான தாயை கொடூரமாக தாக்கிய மகன் - பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

மதுபோதையில் பணம் கேட்டு வயதான தாயை கொடூரமாக தாக்கிய மகன் - பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

வயதான தாயை கொடூரமாக தாக்கிய மகன்

வயதான தாயை கொடூரமாக தாக்கிய மகன்

Son Attacked his Mother : கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் சவற தெற்கும் பாகம் பகுதியில் வயதான தாயை தனது மகன் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகளும், அதனை தடுக்க வந்த தம்பியையும் தாக்கும் காட்சிகளும் வெனியாகி அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
கேரளாவில் 84 வயதான ஓமனா என்ற மூதாட்டியை அவரது மகன் ஓமனக் குட்டன் கொடூரமாகவும் கண்மூடித்தனமாகவும் தாக்கியுள்ளார். அப்போது தடுக்க வந்த தம்பியையும் தாக்கும் காட்சிகளும் வெளியாகி அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காண்போரை கண் கலங்க செய்கிறது.

கேரளாவின் சவற தெற்கு பகுதியைச் சேர்ந்த 84 வயது தாயை மகன் ஓமனகுட்டன் கொடூரமாக  தாக்கி, உடுத்திருந்த ஆடையை கிழித்து நிர்வாணமாக்கி, மீண்டும் மீண்டும் அடித்து உதைத்து தாக்குதல் நடத்தி உள்ளார். சித்திரவதை செய்யப்பட்ட இந்த காட்சிகள் ஐந்து நிமிடங்களுக்கு மேல்  வெளியாகியுள்ளன.

அப்போது, தடுக்க வந்த சகோதரன் பாபுவையும் ஓமணக் குட்டன் அடித்துள்ளார். மது போதையில் தாயிடம் பணம் கேட்டு,  தாய் என்றும் பாராமல் நடந்த இந்த கொடுமை காட்சிகள் பார்ப்போரை அதிர்ச்சி அடசிய செய்கிறது.

இந்த  சம்பவத்தை அக்கம்பக்கத்தினர் மொபைல் போனில் படம் பிடித்தனர். தொடர்ந்து இது குறித்து அந்த பகுதி வார்டு உறுப்பினர்  இந்த வீடியோ ஆதாரங்களுடன்  போலீசில் புகார் செய்தார்.  அதனைத் தொடந்து தெக்கும் பாகம் போலீசார் ஓமனக் குட்டனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஓமனா தான் கீழே விழுந்து காயம் அடைந்ததாக முதலில் போலீசாரிடம்  கூறினார். பின்னர் அந்த தாய் கூறுகையில் எதுவாக இருந்தாலும் அவன் என் மகன் , என்னை பார்த்து கொள்வது அவனே எனவும் கண்ணீர் விட்டு கூறியுள்ளார்.

Must Read : உல்லாசமாக வாழ ஆசைப்பட்டு ஏசி மெக்கானிக் செய்த காரியம் - சிசிடிவி கேமராவில் சிக்கிய இளைஞர்

ஆனால் காவல்துறை வீடியோ காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஓமனக்குட்டனிடம் சவற தெற்கு போலீசார் கஸ்டடியில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.
Published by:Suresh V
First published:

Tags: Attack, Kerala, Mother

அடுத்த செய்தி