ஹோம் /நியூஸ் /இந்தியா /

சொத்து பிரித்ததில் அதிருப்தி... பெற்றோரை கொல்ல கூலிப்படையை ஏவிய மகன் கைது!

சொத்து பிரித்ததில் அதிருப்தி... பெற்றோரை கொல்ல கூலிப்படையை ஏவிய மகன் கைது!

ஆந்திராவில் பெற்றோரை கொல்ல மகன் சதித்திட்டம்

ஆந்திராவில் பெற்றோரை கொல்ல மகன் சதித்திட்டம்

சொத்து பிரச்சனையில் தந்தையை கொலை செய்தால் ரூ.3 லட்சம், தாயையும் சேர்த்து கொலை செய்ததால் ரூ.5 லட்சம் கூலிப்படையை ஏவிய மகன் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Nellore, India

  ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவலாலியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் இளைய மகன் லட்சுமி நாராயணா. கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய சொத்து முழுவதையும் மகன்கள் இரண்டு பேருக்கும் பிரித்து கொடுத்துவிட்டார். அதில் மூத்த மகனுக்கு பிரித்து கொடுக்கப்பட்ட சொத்து தற்போது சந்தை மதிப்பு உயர்வு காரணமாக அதிக விலை மதிப்பில் உள்ளது. எனவே எப்படியாவது தன்னுடைய அண்ணனுக்கு பிரித்து கொடுத்த சொத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று லட்சுமி நாராயணா முடிவு செய்தார்.

  இதற்கு தந்தை பாலகிருஷ்ணா, தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் தடையாக இருப்பதாக அவர் கருதினார். எனவே முதலில் தந்தை, தாய் இரண்டு பேரையும் கொலை செய்து அதன் பின்னர் அண்ணனையும் கொலை செய்ய அவர் திட்டமிட்டு இருந்தார்.

  எனவே, தனக்குத் தெரிந்த ஷேக் சபியுல்லா என்பவரை அழைத்து தந்தை, தாய் இரண்டு பேரையும் கொலை செய்ய வேண்டும். தந்தையை கொலை செய்தால் ரூ.3 லட்சம், அவருடன் சேர்த்து தாயையும் கொலை செய்தால் ரூ.5 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று ஒப்பந்தம் பேசியுள்ளார். அதன்பின் அண்ணனையும் கொலை செய்தால், அதற்கு தனியாக பணம் கொடுக்கிறேன் என்று பேசி முடித்தார். இதற்காக ரூ.30,000 லட்சுமி நாராயணா முதல் தவணையாக ஷேக் ஷபியுல்லாவிடம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ஷேக் சபியுல்லா சிறையில் இருந்து வெளியே வந்த தன்னுடைய நண்பர்கள் ஆன ஷேக் கவுல் பாஷா, ஷேக் சாகுல் ஆகியோருடன் பேசி பாலகிருஷ்ணா அவருடைய மனைவி ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

  இதற்காக சபியுல்லா, கவுல் பாஷா, சாகுல் ஆகியோர் லட்சுமி நாராயணன் உடன் சேர்ந்து இரண்டு முறை ஒத்திகை பார்த்துள்ளனர். இந்த நிலையில் திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்பு இருந்த காரணத்தால் கவுல் பாஷா, சாகுல் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஷேக் சபியுல்லாஹ் ஏற்பாட்டின் பேரில் பாலகிருஷ்ணாவை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது பற்றி போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் போது உண்மையைக் கூறிவிட்டனர்.

  இதையும் படிங்க: எருமை மாட்டுடன் செக்ஸ் உறவு - விபரீத செயலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்து சிறையில் அடைப்பு

  இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் லட்சுமி நாராயணா, ஷேக் சபியுல்லாஹ், ஷேக் கவுல் பாஷா, சேக் சாகுல் அவர்களுடைய நண்பரான சுப்பாராவ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். ஷேக் ஷாகுல், ஷேக் கவுல் பாஷா ஆகியோர் திருடி வைத்திருந்த ஆயுதங்கள், நகைகள் ஆகிவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Asset, Murder case, Parents, Property