Home /News /national /

மீட்கப்படுகிறதா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்? இனிப்பான செய்தி சொன்ன விமானப்படை அதிகாரி!

மீட்கப்படுகிறதா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்? இனிப்பான செய்தி சொன்ன விமானப்படை அதிகாரி!

POK

POK

மகாராஜா ஹரிசிங்குடன் ஒப்பந்தம் கையெழுத்தான மறுதினமான அக்டோபர் 27, 1947-ல் இந்திய படைத்துருப்புகள், காஷ்மீரின் புத்கம் விமானப்படைத்தளத்தில் வந்திறங்கின.

என்றாவது ஒரு நாள் இந்தியா முழு காஷ்மீரையும் கைப்பற்றும் என்று புத்கம் தரையிறங்குதலின் 75வது ஆண்டு விழாவில் இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் மாநிலம் மூலம் தீராத பகை இருந்து வருகிறது. சுதந்திரத்தின் போது இந்தியாவில் இருந்து தனி நாடாக பிரிந்து சென்ற பாகிஸ்தான், காஷ்மீரை அத்துமீறி கைப்பற்ற முனைந்த போது, காஷ்மீர் மன்னரான மகாராஜா ஹரி சிங், இந்தியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் பகுதியாக மாறியது. ஒப்பந்தம் கையெழுத்தான மறுதினமான அக்டோபர் 27, 1947-ல் இந்திய படைத்துருப்புகள், காஷ்மீரின் புத்கம் விமானப்படைத்தளத்தில் (ஸ்ரீநகர் விமானநிலையம் இங்கு தான் இயங்கி வருகிறது) வந்திறங்கின. இந்த நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.

புத்கம் தரையிறங்குதல் என அழைக்கப்படும் இந்த வரலாற்று நிகழ்வின் பவள விழா ஆண்டு இன்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட மேற்கு ஏர் கமாண்ட், ஏர் ஆபீசர் கமாண்டிங் இன் சீஃப், அமித் தேவ் (ஏர் மார்ஷல்), செய்தியாளர்களிடையே பேசுகையில் என்றாவது ஒரு நாள் இந்தியா, முழு காஷ்மீரையும் கைப்பற்றும் என கூறினார்.

Also read: மனைவி கொடுமை தாங்கல.. ப்ளீஸ் என்னய ஜெயிலுக்கு அனுப்பிருங்க – போலீசுக்கு கணவர் நூதன கோரிக்கை

ஏர் மார்ஷல் அமித் தேவ் கூறுகையில், “தற்போதைய சூழலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றும் திட்டம் எதுவும் இல்லை, காஷ்மீர் என்பது ஒரே பிரதேசம். ஒரு தேசம் என்பது ஒன்று மட்டுமே. இருபக்கமும் உள்ள மக்கள் உணர்வால் ஒன்றுபட்டவர்கள். இருப்பினும், வரும் ஆண்டுகளில் என்றாவது ஒரு நாள் இந்தியா முழு காஷ்மீரையும் கைப்பற்றும் என்று உறுதியாக நம்புகிறேன், ஏனென்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீரிகளை பாகிஸ்தான் மரியாதையுடன் நடத்தவில்லை.

அக்டோபர் 27, 1947 அன்று இந்திய ராணுவனும், விமானப்படையும் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளின் விளைவாக மட்டுமே இந்தப் பகுதியில் உள்ள காஷ்மீர் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்.

Also read:  மகன் ஆர்யனை கைது செய்த NCB அதிகாரி ஷாருக்கானை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியவர் – எதற்கு?

புத்கம் தரையிறங்குதல் நிகழ்வின் 75வது ஆண்டு தினத்தை கொண்டாடுவது ஒரு வரலாற்று நிகழ்வாகும். மகாராஜா ஹரி சிங்கிற்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே, நம்முடைய படைத்துருப்புகளை உடனடியாக ஸ்ரீநகர் விமான தளத்துக்கு அனுப்பி வைத்தோம், அதன் மூலம் ஸ்ரீநகர் விமான படைத்தளம் காக்கப்பட்டது. அதன்பிறகு பாகிஸ்தான் ராணுவத்தை பின்வாங்கச் செய்தோம். கபாலிகள் (மலைவாழ் மக்கள்) நமக்கு ஆதரவாக நின்றார்கள்.

Also read:  இந்தியாவுடனான T20 போட்டி குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரிய பாகிஸ்தான் வீரர்!

ஐ.நா மன்றம் மட்டும் இதில் தலையிடாமல் இருந்திருந்தால் இந்நேரம் ஒட்டுமொத்த காஷ்மீரும் நம்முடையதாக இருந்திருக்கும். காஷ்மீரில் பல்வேறு சவால்களை இந்திய ராணுவம் சந்தித்திருக்கிறது. வெறும் 7 நாட்களில் பூஞ்ச் பகுதியில் ஒரு விமான தளத்தை அமைத்திருக்கிறோம். பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரக்கூடிய ட்ரோன் தாக்குதல்கள் மிகச்சிறியவை, அவற்றை சமாளிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளது. வரும் காலங்களில் நம்முடைய ட்ரோன் எதிர்ப்பு திறன் மேம்படும். விமானப்படை தொழில்நுட்ப அளவில் புதிய பரிமானம் எடுத்திருப்பதாகவும் ஏர் மார்ஷல் தேவ் தெரிவித்தார்.
Published by:Arun
First published:

Tags: Air force, Jammu and Kashmir, Kashmir

அடுத்த செய்தி