ஹோம் /நியூஸ் /இந்தியா /

’ஏசியை இப்படி பயன்படுத்தாதீங்க... ப்ளீஸ்..! - சர்வதேச சுற்றுசூழல் பாதுகாப்பு நிகழ்வில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

’ஏசியை இப்படி பயன்படுத்தாதீங்க... ப்ளீஸ்..! - சர்வதேச சுற்றுசூழல் பாதுகாப்பு நிகழ்வில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

நமது அன்றாட நடவடிக்கை மூலம் நம்மை மேம்படுத்துவதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் சர்தார் படேலின் ஒற்றுமைச் சிலை அருகே சுற்றுச்சூழலுக்கு ஏற்க வாழ்க்கை முறை (லைஃப்) இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஐ.நா பொதுசெயலாளர் அன்டோனியோ குட்ரஸ் நேரில் வருகை தந்து பங்கேற்ற நிலையில், 11 நாடுகளின் தலைவர்களும் காணொளி வாயிலாக பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.

  நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி சுற்றுச்சூழல் சந்திக்கும் சவால்கள், பருவநிலை மாற்றம் ஆகியவை குறித்து முக்கிய கருத்துகளை கூறினார். மேற்கண்ட தலையாய பிரச்சனைகளை எதிர்கொள்வதில் மக்கள் பங்களிப்பு என்ன என்பதை பற்றி பிரதமர் பேசினார். தனது உரையில் அவர் கூறியதாவது:- "அனைத்து முக்கிய பிரச்சினையையும் அரசிடமோ அல்லது சர்வதேச அமைப்புகளிடமோ மட்டுமே விட்டுவிடுகிறது. மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை அனுபவித்து வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளில் எதிர்பாராத பேரழிவுகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார். பருவநிலை மாற்றம் என்பது கொள்கை உருவாக்கத்திற்கு அப்பாற்பட்டது என்பதையும், சுற்றுச்சூழலுக்கு தனிமனிதனாகவும், குடும்பமாகவும், சமூகமாகவும் பங்களிக்க வேண்டும்.

  எப்போதும் ஏசி வேண்டும் என சிலர் ஏசியை 16 டிகிரியில் வைத்துக்கொண்டு பின்னர் குளிர்கிறது என போர்வையும் போர்த்திக்கொள்கிறார்கள். தேவையில்லாமல் ஏசிக்களை அதிகம் பயன்படுத்துவதால் மின்சார ஆற்றல்தான் வீணாகிறது. எனவே, உடலுக்கு தேவையான தட்பவெட்பத்திற்கு ஏசியை நாம் பயன்படுத்த வேண்டும். சிலர் உடல் உழைப்புக்காக உடல் பயிற்சி செய்ய ஜிம்முக்கு செல்கிறார்கள். ஆனால், ஜிம்மிக்கு சொகுசாக காரில் செல்கிறார்கள். ஏன் நடந்தோ அல்லது சைக்கிளிலோ ஜிம்மிக்கு செல்வதே சிறந்த பயிற்சிதானே. இவ்வாறு நமது அன்றாட நடவடிக்கை மூலம் நம்மை மேம்படுத்துவதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

  சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் (LIFE) சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நமது அன்றாட வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டே தொடங்கப்பட்டுள்ளது. நமது வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்று நம்புகிறேன். பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது. இன்று, உலகளவில் சர்வதேச நாடுகள் சராசரியாக ஆண்டுக்கு 4 டன் அளவில் கார்பன் வெளியீடு இருக்கும் போது, ​​இந்தியாவில் அது சுமார் 1.5 டன்கள் மட்டுமே வெளியிடுகிறது.

  இதையும் படிங்க: எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டை உயர்த்தி கர்நாடகா அரசு அவசர சட்டம் - அமைச்சரவை ஒப்புதல்!

  இந்தியா தற்போது காற்றாலை ஆற்றல் உற்பத்தியில் நான்காவது இடத்திலும், சூரிய மின் சக்தி உற்பத்தியில் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கடந்த 7-8 ஆண்டுகளில் சுமார் 290 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச இலக்குகளை காலக்கெடுவுக்கு முன்னரே முடிக்கும் நோக்கில் இந்தியா பயணிக்கிறது" எனத் தெரிவித்தார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Air conditioner, Environment, Gujarat, PM Modi, UN General Secretary Antonio Guterres