Home /News /national /

சாதி, மதத்தின் பெயரால் சில கட்சிகள் மக்கள் மனதில் விஷத்தை விதைக்க முயற்சிக்கின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சாதி, மதத்தின் பெயரால் சில கட்சிகள் மக்கள் மனதில் விஷத்தை விதைக்க முயற்சிக்கின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

PM Modi வாரிசு அரசியல் நாட்டை கீழ் நோக்கி இழுக்கின்றது, இளைஞர்களுக்கும் நாட்டுப் பற்று மிக்கவர்களுக்குமே வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

  2024 மக்களவை தேர்தலுக்கு முன்னேற்பாடாக இருக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குழுமியிருந்த பாஜக நிர்வாகிகளிடம் காணொலி மூலம் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  அவர் பேசுகையில், "இந்த மாதத்துடன் பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஏழைகள் நலன், சமமான வளர்ச்சி, சமூக நீதி, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாஜக ஆட்சியால் மேம்பட்டுள்ளன. நம்மிடம் 1,300க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், 400க்கும் மேற்பட்ட எம்பிக்கள், 100க்கும் மேற்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். நாம் இந்த அதிகாரத்தை அனுபவிப்பதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக 2014ஆம் ஆண்டுக்கு முன் நம்பிக்கை இழந்து காணப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக நமது கவனத்தை செலுத்திவருகிறோம்.

  நீண்ட நாள் நோயுடன் இருக்கும் நபர் அதில் இருந்து விடுபடவில்லை என்றால், அதனுடனே வாழ பழகிவிடுவார்கள். இந்த உதாரணம் நாட்டிற்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் மக்கள் அரசின் மீதான நம்பிக்கை இழந்து வாழ்ந்த காலம் இருந்து வந்தது. ஆனால், 2014 ஆம் ஆண்டுக்குப் பின் நாட்டின் நிலைமை மாறிவிட்டது. இன்று மக்கள் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் வாழ்ந்துவருகின்றனர்.

  மக்களிடம் அதிகரித்துவரும் நம்பிக்கை கண்ணெதிரே தெரிகின்றது. இது நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டுசெல்ல தூண்டு சக்தியாக அமைந்துள்ளது. மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற இலக்கில் நாம் பயணிக்க வேண்டும். இதில் யாரும் விடுபட்டு விடக் கூடாது என்பதில் நாம் கவனம் கொண்டிருக்க வேண்டும்.வளர்ச்சியின் அரசியலை பரப்ப நாம் வேலை செய்ய வேண்டும். நமது செயலால் மற்ற அரசியல் கட்சிகளும் வளர்ச்சி அரசியல் என்ற பாதையில் செல்ல வைக்க வேண்டும்.

  சில அரசியல் கட்சிகள் சமூகத்தில் சாதி, மதத்தின் பெயரால் சமூகத்தில் விஷத்தை விதைக்க முயற்சி செய்கிறார்கள். இதை நாம் மக்களிடம் தெளிவுபடுத்தி அவர்களை எச்சரிக்கையுடன் வைத்திருக்க வேண்டும். நாட்டு நலனிலிருந்து திசை திருப்பும் செயல்களில் மற்ற அரசியல் கட்சிகள் செயல்படலாம். நாம் அதில் சிக்கிக்கொள்ளக் கூடாது. வாரிசு அரசியல் நாட்டை கீழ் நோக்கி இழுக்கின்றது. இளைஞர்களுக்கும் நாட்டுப் பற்று மிக்கவர்களுக்குமே வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். பாஜக அனைத்து இந்திய மொழிகளுக்குமான கட்சியாகும். நாங்கள் அனைத்து மொழிகளையும் மதிப்பவர்கள். நான் அனைத்து குடிமக்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளவன்" என்றார்.

  இதையும் படிங்க: இன்னும் 2 வருடங்களில் 50சதவீத விபத்து குறைஞ்சிடும்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!

  கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், மூன்று நாள் நிர்வாகிகள் மாநாடு நடத்தப்பட்டது. தலைவர் சோனியா காந்தி தலைமையேற்று நடத்திய இந்த மாநாட்டில் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்று கட்சி வளர்ச்சி, வரப்போகும் தேர்தலை எதிர்கொள்ளத் தேவையான யூகங்கள் ஆகியவை குறித்து விவாதித்தனர். இந்நிலையில், அடுத்த சில நாள்களிலேயே, ராஜஸ்தானில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் பிரதமர் மோடி தற்போது உரையாற்றியுள்ளார்.
  Published by:Kannan V
  First published:

  Tags: BJP, Modi speech, PM Modi

  அடுத்த செய்தி