நாட்டின் விஞ்ஞானிகள், போலீஸ், பிரதமர் மீது நம்பிக்கையில்லாத சில முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்லலாம்: பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம்

நாட்டின் விஞ்ஞானிகள், போலீஸ், பிரதமர் மீது நம்பிக்கையில்லாத சில முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்லலாம்: பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம்

பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம்.

பிரதமர் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுக்குப் பாகிஸ்தான் மீதுதான் நம்பிக்கை உள்ளது, அங்கு செல்லட்டும். அங்கு சென்று அந்த விஞ்ஞானிகளை சந்தேகிக்கட்டும்.” என்றார் சோம்.

 • Share this:
  கோவிட்-19 தடுப்பூசிக்கு சில தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதையடுத்து, ‘சில முஸ்லிம்கள் நம் நாட்டு விஞ்ஞானிகளை நம்புவதில்லை அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லலாம்’ என்று பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் பேசியுள்ளார்.

  செய்தியாளர்களிடம் பேசிய சங்கீத் சோம், எந்த முஸ்லிம்கள் இந்திய விஞ்ஞானிகளை நம்பவில்லை என்று சொல்லாமலேயே கூறிய போது, “துரதிர்ஷ்டவசமாக நாட்டில் உள்ள சில முஸ்லிம்களுக்கு இந்திய விஞ்ஞானிகள், போலீஸ் மீது நம்பிக்கை இல்லை.

  பிரதமர் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுக்குப் பாகிஸ்தான் மீதுதான் நம்பிக்கை உள்ளது, அங்கு செல்லட்டும். அங்கு சென்று அந்த விஞ்ஞானிகளை சந்தேகிக்கட்டும்.” என்றார் சோம்.

  இவர் சர்ச்சையாக பேசுவது இது புதிதல்ல.

  டெல்லியில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் சங்கீத் சோம் கூறியது என்ன தெரியுமா, “அங்கு போராட்டம் நடத்துபவர்கள் விவசாயிகளே அல்ல, அவர்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்” என்றார்.

  மேலும் உ.பி. சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்வை இவர் விமர்சிக்கும் போது, “அகிலேஷ் உ.பி.யை ஆண்ட போது முகலாயர்கள் ஆண்டது போல் இருந்தது உ.பி. ஆனால் அகிலேஷ்தான் அங்கு கடைசி முகலாய ஆட்சியாளர், ஏனெனில் அவர் இனி ஆட்சிக்கே வர முடியாது” என்றார்.
  Published by:Muthukumar
  First published: