முகப்பு /செய்தி /இந்தியா / பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் மத்திய அமைச்சராவதை எதிர்க்கட்சிகளால் பொறுக்க முடியவில்லை: பிரதமர் மோடி!

பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் மத்திய அமைச்சராவதை எதிர்க்கட்சிகளால் பொறுக்க முடியவில்லை: பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடியை பேசவிடாமல் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டன.  அமளிக்கு மத்தியில்பேசிய மோடி,  பெண்கள், பிற்படுத்த சமூகத்தை சார்ந்தவர்கள்,விவசாயிகளின் மகன்கள் ஆகியோர் மத்திய அமைச்சர் ஆகியுள்ளதை சிலர் மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ளவில்லை என்று விமர்சித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பெண்கள், சாதாரண குடும்பத்திலிருந்து  வந்தவர்கள் மத்திய அமைச்சராக பதவியேற்பதை எதிர்க்கட்சிக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று கூடியது. ஆகஸ்ட் 31ம் தேதிவரை  கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பல்வேறு மசோதாக்கள், திருத்த மசோதாக்கள் ஆகியவற்றை தாக்கல் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு அண்மையில் அமைச்சரவையை மாற்றியமைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிதாக பதவியேற்றவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிமுகம் செய்து வைக்க முயன்றார். ‘பெண்கள், தலித், பழங்குடியிடி சமூகத்தினர் அதிகஅளவில் அமைச்சர்களாகி உள்ளதால் நாடாளுமன்றத்தில் புத்துணர்ச்சி இருப்பதை  காணமுடிகிறது.  வேளாண் மற்றும் கிராம பின்புறங்களை சார்ந்த, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் தற்போது அமைச்சர்களாகியுள்ளனர்’ என்று கூறினார்.

அப்போது, பிரதமர் மோடியை பேசவிடாமல் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டன.  அமளிக்கு மத்தியில்பேசிய மோடி,  பெண்கள், பிற்படுத்த சமூகத்தை சார்ந்தவர்கள்,விவசாயிகளின் மகன்கள் ஆகியோர் மத்திய அமைச்சர் ஆகியுள்ளதை சிலர் மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ளவில்லை.  அதனால்தான், புதிய மத்திய அமைச்சர்களின் அறிமுகத்தை அவர்கள் தடுக்கின்றனர்’ என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க: பெட்ரோல்-டீசல் விலை குறையப் போகிறது: உற்பத்தியை அதிகரிக்க 'எண்ணெய்’ நாடுகள் சம்மதம்!

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் வேளாண் சட்டம்,  எரிபொருள் விலை உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர முயன்றனர். இதன் காரணமாக அவையில் தொடர்ந்து அமளி ஏற்பட்டது. அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ‘ இந்திய ஜனநாயகம் உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாக உள்ளது. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்பை குறைக்கும் வகையில் செயலாற்றுகிறீர்கள்’ என்று எதிர்க்கட்சிகளை கடிந்துகொண்டார்.

இதையும் படிங்க: கொங்கு மண்டலத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர முயற்சிக்க வேண்டும் - அண்ணாமலைக்கு கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை!

எதிர்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டன.

First published:

Tags: Modi, Parliament, Parliament Session