இமயமலையில் பனிச்சரிவு... சிக்கிக்கொண்ட இந்திய ராணுவ வீரர்கள்!

Siachen | இன்று மாலை 3.30 மணி அளவில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இமயமலையில் பனிச்சரிவு... சிக்கிக்கொண்ட இந்திய ராணுவ வீரர்கள்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: November 18, 2019, 9:23 PM IST
  • Share this:
இமயமலையின் சியாச்சென் பகுதியில் இன்று மாலை பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் பலர் சிக்கிக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிக்கிக்கொண்டுள்ள இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. சியாச்சென் முகாம்களில் உள்ளோர் , கண்காணிப்பு பணிக்குச் சென்றோர் என ஏராளமான வீரர்கள்  சிக்கிக்கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்று மாலை 3.30 மணி அளவில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் வந்துள்ள தகவலின் அடிப்படையில் இரண்டு பேர் பலியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. சியாச்சென் முகடு கடல் மட்டத்திலிருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது.


உலகின் மிக உயரமான போர்க்களமாக சியாச்சென் பகுதி உள்ளது.
First published: November 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading