• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 39 வயதில் ராணுவ அதிகாரி ஆனது எப்படி? சாப்ட்வேர் என்ஜியரின் சக்சஸ் ஸ்டோரி!

39 வயதில் ராணுவ அதிகாரி ஆனது எப்படி? சாப்ட்வேர் என்ஜியரின் சக்சஸ் ஸ்டோரி!

சாப்ட்வேர் என்ஜியரின் சக்சஸ் ஸ்டோரி

சாப்ட்வேர் என்ஜியரின் சக்சஸ் ஸ்டோரி

நான் ஏன் இராணுவத்தில் சேர விரும்பினேன்?, ராணுவத்தில் அதிகாரியாக இருந்து நான் என்ன பெற விரும்புகிறேன்

  • Share this:
இலக்கை அடைவதற்கு வயது ஒரு தடை அல்ல என்பதை யாரேனும் ஒருவர் நிரூபிக்கும் வகையில் சாதித்துக் கொண்டே இருக்கின்றனர். பெங்களுருவைச் சேர்ந்த சதீஸ் குமார் என்ற சாப்ட்வேர் என்ஜினியர் தன்னுடைய 39 வது வயதில் லெப்டினன்ட் ஆகி சாதனை படைத்துள்ளார். தன்னுடைய உணர்ச்சி மிக்க சக்சஸ் ஸ்டோரியை Linked In தளத்தில் பதிவு செய்துள்ளார்.

"ராணுவ வீரராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை. நேர்காணலின்போது, சக போட்டியாளர்கள் அனைவரும் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர். நான் மட்டும் 39 வயதுடையவனாக இருந்ததால், வயதைக் காரணம் காட்டி நேர்முகத்தேர்வில் இருந்து நிராகரிக்கப்படலாம் என்று எண்ணியிருந்தேன். சம்பிரதாயத்துக்காக நேர்க்காணலுக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியது" என சதீஸ்குமார் குறிப்பிடுகிறார். இதன் பின்னர் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவங்களை முதலில் இருந்து விரிவாக எழுதியுள்ளார்.

தேர்வு :

"முதலில் இரண்டு மணி நேரம் உடைய எழுத்துத்தேர்வை எழுதினேன். இரு பேப்பர்களைக் கொண்ட அந்த தேர்வில் கணிதம், அறிவியில், பொதுஅறிவு, லாஜிக்கல் ரீசனிங் மற்றும் ஆங்கிலப் புலமையை சோதிக்கும் வகையில் இருந்தது. இந்த தேர்வுக்குப் பிறகு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டேன். மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள ஒருவர், உளவியலாளர் ஒருவர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் ரேங்க்கில் இரண்டு அதிகாரிகள் தலைமையிலான குழு சில கேள்விகளை என்னிடம் முன்வைத்தது.

நான் ஏன் இராணுவத்தில் சேர விரும்பினேன்?, ராணுவத்தில் அதிகாரியாக இருந்து நான் என்ன பெற விரும்புகிறேன்?, கார்ப்பரேட்டில் எனது தற்போதைய அனுபவத்தை நான் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும் மற்றும் இராணுவத்திற்கு பங்களிப்பது எப்படி? ஆகிய கேள்விகளை நான் எதிர்கொண்டேன்.

சேவைகள் தேர்வு வாரியம் (SSB):

20179 பேர் இருந்த எண்ணிக்கை நேர்க்காணலுக்குப் பிறகு 816 ஆக குறைந்தது. எஞ்சியிருந்த அனைவரும் 200 பேட்சுகளாக பிரிக்கப்பட்டன. அவர்களில் 172 பேர் அடங்கிய முதல் குழுவுக்கு போபாலில் ஸ்கிரீனிங் டெஸ்ட் உள்ளிட்ட சோதனைகள் நடைபெற்று, அதன் முடிவில் எண்ணிக்கை 16 ஆக குறைந்தது. அவர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்த நான்கு நாட்களில் தலைமைப் பண்பு, குழுப்பணி, பகுத்தறியும் சிந்தனை, சூழ்நிலை எதிர்வினை, தடைகள் மற்றும் நேர்க்காணல்கள் அடிப்படையில் மதிப்பீடு வழங்கப்பட்டது. அங்கு நான் இருந்தது எனக்கு வாழ்நாள் அனுபவத்தைக் கொடுத்தது. அதில், மிக சிலரே அடுத்த சுற்றுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

பின்னடைவு:

அந்த 16 பேரில் இறுதியாக 4 பேர் மட்டுமே இறுதியாக தேர்வு செய்யப்பட்டு ராணுவ மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அங்கு, வெவ்வேறு சில காரணங்களுக்காக 4 பேரும் நிராகரிக்கப்பட்டாலும், அப்பீல் செய்யும் வாய்ப்பு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. நான் பெங்களுர் ராணுவ மருத்துவ மையத்தை தேர்ந்தெடுத்து ஆப்பில் செய்தேன். அதில் செப்டம்பர் 2020 தேர்ச்சி பெற்றேன்.

ஆவணங்கள் :

அடுத்தது ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெற்றது. போலீஸ் சரிபார்ப்பு, மாநில உளவுத்துறை சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் 4-6 வாரங்களில் முடிவடைந்தது.

இறுதியில் வெற்றி:

இறுதியாக ஏப்ரல் 2021ல் எனக்கு கமிஷனிங் கடிதம் வந்தது. கிரெனேடியர்ஸ் ரெஜிமென்ட்டின் 118 காலாட்படை (TA) பட்டாலியனுக்கு நான் லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்டேன்" என சதீஸ்குமார் தான் எதிர்கொண்ட அனைத்து நடைமுறைகளையும் விரிவாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பதிவிட்டுள்ளார். சாதிக்க விரும்பும் அனைவருக்கும் சதீஸ்குமாரின் பயணம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: