ஆயிரக்கணக்கான ஆதரவற்றவர்களின் தாய் என புகழப்பட்ட பிரபல சமூக சேவகி சிந்துதாய் சப்கல் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. கடந்த ஆண்டு தான் அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
மகாராஷ்டிர மாநிலம் வர்தா மாவட்டத்தில் உள்ள பிம்பிரி மேகே எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்துதாய் சப்கல். சமூக சேவைக்காக 2021ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர் இதுவரை 750க்கும் மேற்பட்ட சமூக சேவைக்கான விருதுகளை வாங்கியிருக்கிறார். ஆதரவற்றவர்கள் உணவருந்துவதற்காக சாலைகளில் பிச்சை எடுத்த சிந்துதாய் சப்கல், தனது வாழ்க்கையை ஆதரவற்றவர்களின் நலனுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை குடும்பமாக நினைத்து அவர்களுடன் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.
Also read: வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏவுக்கு ஷாக் கொடுத்த தொகுதி மக்கள்..
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக குடலிறக்கத்திற்காக புனேவில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிந்துதாய் சப்கலின் உடல்நிலை முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் மருத்துவமனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1948ம், நவம்பர் 14 அன்று பிறந்தவரான சிந்துதாய் சப்கல், தீவிர வறுமையில் தள்ளப்பட்டு, போராட்டமான வாழ்க்கையை நடத்தி ஆதரவற்றவர்களுக்காக வாழத் தொடங்கியவர். 4ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தவேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. அவருடைய 12 வயதில், 32 வயது நபருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டர். 3 பெண் குழந்தைகளுக்கு தாயான அவர், 4வது முறை கர்ப்பமடைந்தபோது அவருடைய கணவரால் கைவிடப்பட்டார்.
Also read: மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள்
அவருடைய பெற்றோர் மற்றும் கிராமத்தினரும் கைவிட்டபோது வாழ்க்கையை நடத்த ரயில் நிலையங்களில் பிச்சை எடுத்து தனது குழந்தைகளுக்கு உணவளித்தார். அப்போது அங்கு பல ஆதரவற்றவர்கள் பிச்சை எடுப்பதை பார்த்து ஆதரவற்றவர்களின் தாயாக மாறி, பிறரின் பசிக்காகவும் அதிகமாக பிச்சை எடுக்கத் தொடங்கினார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஆதரவற்றவர்கள் இல்லத்தை நிறுவி, 1500க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் தாயாகவே மாறியவர் சிந்துதாய் சப்கல். பத்ம ஸ்ரீ உள்ளிட்ட 750க்கும் மேற்பட்ட சமூக சேவை விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை முழுவதையுமே ஆதரவற்றவர்களின் நலனுக்காக செலவிட்டுள்ளார்.
lso read: திவாலாகும் இலங்கை அரசு.. ஸ்தம்பித்த பொருளாதாரம் - மகிந்த ராஜபக்சே பதவி விலகல்?
1500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளின் மூலம் மிகப்பெரிய குடும்பமாக சிந்துதாய் சப்கலின் குடும்பம் மாறியிருக்கிறது. இதன் மூலம் 382 மருமகன்களும், 49 மருமகளுடன் சிந்துதாய் சப்கல் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சிந்துதாய் சப்கலின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Padma Shri