ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க வரைவு அறிக்கை- மத்திய அமைச்சரவைக்கு அனுப்பிய சமூக நீதித்துறை

திருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க வரைவு அறிக்கை- மத்திய அமைச்சரவைக்கு அனுப்பிய சமூக நீதித்துறை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை, மத்திய சமூக நீதித்துறை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உலக அளவில் திருநங்கைகள் சமூகத்தால் அதிக அளவில் புறக்கணிக்கப்படும் பிரிவினராக இருந்துவருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் திருநங்கைகள் குறித்த புரிதல் இல்லாததால் அவர்களை வெறுக்கத்தக்கவர்களாகவும், கேலிக்குரியவர்களாகவுமே பார்க்கப்பட்டுகின்றனர். அவர்களை சமூக அளவில் முன்னேற்ற இடஒதுக்கீடு வேண்டும் என்ற குரல்கள் நீண்ட காலமாக இருந்துவந்தன.

இந்தநிலையில், அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தால், அந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். திருநங்கைகள் இடஒதுக்கீடு பெற ஏதுவாக, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அவர்களை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான , 27 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் திருநங்கைகள் பயன்பெறுவர்.  மூன்றாம் பாலினத்தவரை சம நிலையில், சம அந்தஸ்தில் வைத்து மதிக்க வேண்டும் என்ற, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

First published:

Tags: News On Instagram, OBC Reservation, Transgender