ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஓவர் ஸ்பீடு.. மரத்தில் மோதி நொறுங்கிய கார்.. சோஷியல் மீடியா பிரபலம் உயிரிழப்பு!

ஓவர் ஸ்பீடு.. மரத்தில் மோதி நொறுங்கிய கார்.. சோஷியல் மீடியா பிரபலம் உயிரிழப்பு!

ரோஹித் பாட்டீ

ரோஹித் பாட்டீ

வண்டி ஓட்டி வந்த பாட்டீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இறந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர்கள் மனோஜ் மற்றும் அதிஷ் காயங்களுடன், கிரேட்டர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Noida |

  சமூக ஊடகப் பிரபலம் ஒருவர் திங்களன்று கிரேட்டர் நொய்டாவில் வேகமாகச் சென்ற கார் மரத்தில் மோதியதில் இறந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

  வட இந்திய சமூக ஊடகப் பிரபலமான ரவுடி பாட்டீ என அழைக்கப்படும் ரோஹித் பாட்டீ சாலை விபத்தில் நேற்று உயிரிழந்தார். அவரது நண்பர்கள் இருவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

  ரோஹித், புலந்த்ஷாஹரைச் சேர்ந்தவர். ஆனால் கிரேட்டர் நொய்டாவின் சி செக்டரில் வசித்து வந்தார். குஜார் சமூகத்தைச் சேர்ந்த ரோஹித், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் பிரபலமாக இருந்வந்தார். அங்கு அவர் போடும் வீடியோக்களுக்கு ஆயிரக்கணக்கான பாலோவர்கள் உள்ளனர்.

  இதையும் படிங்க : சாலையோரம் கிடந்த சூட்கேஸுக்குள் இளம்பெண் உடல்.. விசாரணையில் சிக்கிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

  "நேற்று இரவு அவர்கள் மூவரும் ஒரு விருந்தில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. திரும்பும் வழியில் சுகாத்பூர் சுரங்கப்பாதை அருகே அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேகமாக வந்த அவர்களது கார் திருப்பத்தை கவனிக்காமல் மரத்தில் மோதியது" என்று உள்ளூர் பீட்டா 2 காவல்துறையின் பொறுப்பாளர் அனில் குமார் கூறினார்.

  வண்டி ஓட்டி வந்த ரோஹித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இறந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர்கள் மனோஜ் மற்றும் அதிஷ் காயங்களுடன், கிரேட்டர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் தீவிர காயங்கள் காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  ரோஹித்தின் மரணச் செய்தி பரவிய சிறிது நேரத்திலேயே, அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்த விரைந்தனர். மேலும் பாட்டீயின் இறுதிச் சடங்குகளின் ரீல்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Car accident, Celebrities, Noida, Social media