புதுவை தேர்தல் பிரச்சாரங்களில் காற்றில் பறந்த சமூக இடைவெளி!

புதுவை தேர்தல் பிரச்சாரங்களில் காற்றில் பறந்த சமூக இடைவெளி!

பாண்டிச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் தனி மனித இடைவெளியும், சமூக இடைவெளியும் பின்பற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

  • Share this:
புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தெருமுனை கூட்டம், பொதுக்கூட்டம், திருமண மண்டபங்களில் ஆலோசனைக்கூட்டம் போன்றவை நடைபெற்று வருகிறது. ஆனால் இங்கு சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இதனால் கொரோனா  நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வகுப்புகள் மூடப்பட்டன. பேராசிரியர்கள் மட்டும் கல்லூரிக்கு வந்த நிலையில் மேலும்  5 பேராசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.  8 பேருக்கு நோய் அறிகுறி உள்ளது. இதே போல் அனைத்து கல்லூரிகளிலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் பள்ளிகளை போல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி புதுச்சேரியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்று வரை (23ம் தேதி) கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40, 520. கடந்த 24 மணி நேரத்தில்  87 பேருக்கு  நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. காரைக்காலை சேர்ந்த 84 வயதுமிக்கவர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இதனால் மொத்தமாக 677 பேர் இறந்துள்ளனர். 110 நாட்களுக்கு முன் ஒற்றை இலக்கில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 84ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப மக்களிடம் முக கவசம் அணிவது குறைந்து விட்டது. தேர்தல் பிரச்சாரங்களில் தனி மனித இடைவெளியும் சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. இதனை தேர்தல் துறையினர் கடந்த ஒரு வாரமாக ஆதரங்களுடன் வீடியோவில் பதிவிட்டுள்ளன..

இதனையடுத்து வாக்கு சேகரிப்பின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் சட்டப்படி கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பூர்வா கார்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வாக்கு சேகரிப்பின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கடும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.  முக கவசம் அணிதல்,  சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை பின்பற்றாவிடில் இந்திய குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனிடையே கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணியை சுகாதார துறை தீவிரப்படுத்தி இருக்கிறது.அனைத்து சுகாதார மையங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.புதுச்சேரியில் தடுப்பூசி தடுப்பாடு இல்லை என துணைநிலை ஆளுநர் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் அனைவரும் தயமிக்கமின்றி தடுப்பூசி எடுத்து கொண்டு போலீயோவை போல கொரோனாவை இந்தியாவில் இருந்து விரட்ட புதுச்சேரி அரசின் னாசுகாதார துறை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Published by:Karthick S
First published: