டூல் கிட் விவகாரத்தில் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கைதாகிறார்களா?

டூல் கிட் விவகாரத்தில் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கைதாகிறார்களா?

டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்!

விவசாயிகள் நடத்திய இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையை காலிஸ்தான் அமைப்பு தூண்டியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு ஆதாரமாக சமூக வலைதளங்களில் வெளியான டூல் கிட்டை குறிப்பிட்டு வருகின்றனர்.

 • Share this:
  பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லையில் விவசாயிகள் பல நாள்களாக கடும் குளிரிலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது தொடர்பாக விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

  விவசாயிகள் நடத்திய இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையை காலிஸ்தான் அமைப்பு தூண்டியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு ஆதாரமாக சமூக வலைதளங்களில் வெளியான டூல் கிட்டை குறிப்பிட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஸ்வீடன் நாட்டு சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கும் இந்த டூல் கிட்டை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர் மீதும் டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  டூல் கிட் தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவி மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். திஷாவின் மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு காலிஸ்தான் அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட திஷா ரவி, ``நான் டூல் கிட்டை உருவாக்கவில்லை. நாங்கள் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கவே விரும்பினோம்” என்று தெரிவித்துள்ளார்.

  இந்த நிலையில் டூல் கிட் வழக்கு தொடர்பாக நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனு ஆகிய இரண்டு சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டுவதில் எதிர்கட்சிகள் உட்பட பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

  Must Read: திஷா ரவி கைது ‘அராஜகம்’- டி.எம்.கிருஷ்ணா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கண்டனம்

   

  அவர்கள் கைது செய்யப்படுவதில் முறையாக சட்டம் பின்பற்றப்படுகிறதா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
  Published by:Ram Sankar
  First published: